இந்த மூன்று பொருட்கள் போதும், இந்த பேஸ் பேக் செய்து பயன்படுத்தினால், உங்கள் முகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கும்.
வெந்தயப் பவுடர், கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய். இந்த மூன்று பொருட்களும் இந்த பேஸ்பேக் செய்ய தேவையான பொருட்கள். 2 ஸ்பூன் வெந்தயப் பவுடர். 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன், இதை நன்றாக கலந்துகொள்ளவும். முகம், கழுத்தின் பகுதி, கைகள் ஆகியவற்றில் இதை நாம் தடவிக்கொள்ள வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியேவிட்டு விடுங்கள். தொடர்ந்து தண்ணீரில் நாம் கழுவ வேண்டும். இது ஒரு பிரைட் லுக்கை, பொலிவான சருமத்தை கொடுக்கும். நீங்கள் ஏதேனும் முக்கிய நிகழ்வுக்கு செல்வதற்கு முன்பாக இதை செய்யலாம்.
இதுபோல ஒரு கண்ணாடி போல் உங்கள் சருமத்தை பளபளக்க இதை செய்யுங்கள். அவல், பால், ரோஸ் வாட்டர், க்ளிசரின் இந்த 4 பொருட்கள் தேவை. அவலை நாம் பொடித்துகொள்ள வேண்டும். பொடித்த அவல் 3 ஸ்பூன், பால் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் 3 ஸ்பூன், சிறிய அளவு க்ளிசரின் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்ய வேண்டும். இதை நாம் முகத்தில் மசாஜ் செய்து, பயன்படுத்த வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் மசாஜ் செய்து, முகத்தை கழுவ வேண்டும் , கண்ணாடி போல பொலிவான சருமம் கிடைக்கும். மேலும் இது இளையான சருமத்தை கொடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“