today cinema news : தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இருக்கும் மவுசு, நடிகைகளுக்கு இருப்பதில்லை என்ற விமர்சனமும் அதிகம் முன்வைக்கப்படும். இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். அந்த காலம் வந்த படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது கால்வாசி கூட ஹீரோயின் ரோல்களுக்கே கொடுக்கப்படுவதில்லை.
16 வயதினிலே, அரங்கேற்றம், அவள் ஒரு தொடர் கதை போன்ற படங்கள் இதற்கு மிகப் பெரிய சான்று. சில கதாநாயகிகள் இந்த சூழலை சரியாக புரிந்துக் கொண்டு எப்படியோ தங்களது கேரியரை சரியாக அமைத்து விடுகின்றனர்.
ஜோதிகா, நயன், த்ரிஷா போன்றோர் 10 வருடங்களை கடந்தும் சினிமாவில் தங்களுக்கான பாதையில் மிக சரியாக் சென்றுக் கொண்டு இருக்கிறார்கள். சிலர், இந்த மாற்றத்தை ஆண்டில் பண தெரியாமல் சினிமாவை விட்டே ஒதுங்குகிறார்கள் அல்லது திருமணம், செய்துக் கொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள். அந்த வகையில் இன்றை ஃபோட்டோ கேலரி ஸ்பெஷலாக முதல் படத்தில் நடித்து நல்ல பெயரை வாங்கி பின்பு காணாமல் போன நடிகைகளின் லிஸ்டை தான் பார்க்க போகிறோம்.
1. ரியா சென்:
தமிழில் தாஜ்மகால் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரியா சென் அந்த படத்திற்கு பிறகு எங்கே சென்றார் என்பதே தெரியவில்லை. இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு எப்போதுமே ஃபவரெட்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-48.jpg)
2. பிரியா கில்:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-83.jpg)
தமிழில் அஜித் நடித்த ரெட் படத்தின் மூலம் பிரியா ரொம்ப ஃபேமஸ். அதற்கு அப்புறம் அவர் நடித்த எந்த படங்களும் தமிழில் ரீலீசாகவில்லை. அஜித், விஜய் போன்ற ஸ்டார்களுடன் நடித்து விட்டால் கேரியரில் எங்கயோ போய்விடுவாங்க என்ற பேச்சலாம் பிரியா கில் வாழ்க்கையில் நடக்கவே இல்லை.
3. ரிங்கி ககானா:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-84.jpg)
90ஸ் கிட்ஸின் சாக்லெட் பாய் பிரசாந்த் உட்ன் மஜ்னு படத்தில் அறிமுகமான இவர் இளைஞர்களின் மனதை அதிகளவில் கவர்ந்தார். ஆனால் அந்த படமே அவருக்கு தமிழில் கடைசி படம்.
4. மானு:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-49.jpg)
காதல் மன்னன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மானு அந்த பாத்தில் ரொம்ப அழகாகவே இருப்பார். ஒரே ப்டம் என்றாலும் அவரை இன்று வரை ரசிகர்கள் மறக்கவில்லை. குறிப்பாக அவரின் சிரிப்பை.
5. மோனிகா:
/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-50.jpg)
விஜய்யின் மின்சார கண்ணா படத்தில் அறிமுகமான இவர், இப்போது எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை. ஆனால் அந்த உன் பேர் சொல்ல ஆசை தான் பாடல் இப்போது வரை இளைஞர்களின் ரிங் டோன்.