புளித்த தயிரில் ஷாம்பூ சேருங்க… அழுக்கு கறை பிடித்த பாத்ரூம் பளிச்சென மாறும்!

எத்தனை வருடக் கறையாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே டாய்லெட்டைப் பளபளப்பாக மாற்றலாம். இதற்குத் தேவையான பொருட்கள்:

எத்தனை வருடக் கறையாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே டாய்லெட்டைப் பளபளப்பாக மாற்றலாம். இதற்குத் தேவையான பொருட்கள்:

author-image
WebDesk
New Update
Toilet cleaning Stain removal tips

Toilet cleaning Stain removal tips

உங்கள் வீட்டில் கழிவறை, சமையலறை என பல இடங்களில் இருக்கும் கறைகள் படிந்து மோசமாக இருக்கிறதா? அவற்றை நீக்கக் கஷ்டப்பட்டுத் தேய்த்து வருகிறீர்களா? இனி அந்த கவலை வேண்டாம்! கை வலிக்கத் தேய்க்காமலேயே, உங்கள் கழிவறையும், சமையலறையும் புதியது போலப் பளபளக்க ஒரு சில சூப்பர் ரகசிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருக்கும் அன்றாடப் பொருட்களை வைத்தே இந்த அற்புதத்தை நிகழ்த்தலாம்.

Advertisment

சமையலறை பாத்திரங்களை சுத்தம் செய்ய ஷாம்பு டிப்ஸ்!
சமையல் செய்யும் போது, அடுப்புக்கு அருகில் இருக்கும் பொருட்களின் மீது எண்ணெய் தெறித்து கறையாகப் படிந்துவிடுவது சகஜம். சில சமயம் பாட்டில்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளே இருந்தால் அவற்றை உடனடியாகக் கழுவி சுத்தம் செய்வது கடினமாக இருக்கும்.

இந்தச் சூழலில், ஒரு பவுலில் சிறிதளவு ஷாம்பூவுடன் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். இந்த ஷாம்பு கலந்த நீரில் ஒரு துணியை நனைத்து, நன்றாகப் பிழிந்து, எண்ணெய் படிந்த பொருட்களைத் துடைக்கலாம். இப்படிச் செய்தால், பொருட்கள் பளபளப்பாக மாறுவதோடு, ஷாம்பு வாசனையால் ஈக்கள் மற்றும் கொசுக்கள் அண்டாது. முழுமையாகக் கழுவ நேரம் இல்லாத போதும், பொருட்களை காலி செய்ய முடியாத போதும், இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோலவே, சமையலறையின் மேல் ஷெல்ஃப்களையும் இந்த ஷாம்பு கலந்த நீரால் துடைக்கலாம்.


 
டாய்லெட் கிளீனிங்: தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

எத்தனை வருடக் கறையாக இருந்தாலும், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே டாய்லெட்டைப் பளபளப்பாக மாற்றலாம். இதற்குத் தேவையான பொருட்கள்:

சர்க்கரை பவுடர் - 1 பாக்கெட்
கிளினிக் பிளஸ் ஷாம்பு - 1 ரூபாய் பாக்கெட் (அல்லது வேறு எந்த பிராண்ட் ஷாம்புவும் பயன்படுத்தலாம்)
கல்லுப்பு - 1 ஸ்பூன்
புளித்த தயிர் (பயன்படுத்தாதது) - தேவையான அளவு (இதற்கு பதிலாக புளித்த தோசை மாவும் பயன்படுத்தலாம்)
தண்ணீர் - தேவையான அளவு

டாய்லெட் சுத்தம் செய்யும் முறை

மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் ஒரு பவுலில் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். குறிப்பாக, புளித்த தயிர் வீணாகப் போகிறது என்றால் அதைப் பயன்படுத்தலாம். சாப்பிடுவதற்குப் பயன்படுத்தும் நல்ல தயிரைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, மீந்துபோன புளித்த தோசை மாவு அல்லது இட்லி மாவை பயன்படுத்தலாம்.

இந்தக் கலவையை டாய்லெட் முழுவதும் ஊற்றி, வழக்கமாகப் பயன்படுத்தும் பிரஷ்ஷால் லேசாகத் தேய்க்கவும். அதிக நேரம் காத்திருக்கவோ அல்லது சிரமப்பட்டு தேய்க்கவோ தேவையில்லை. லேசாகத் தேய்த்த உடனேயே தண்ணீர் ஊற்றினால், டாய்லெட் புதிது போல் பளபளப்பாக மாறிவிடும்.

இதர பயன்கள்

இந்தக் கலவை மீதமிருந்தால், பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்திருக்கும் உப்புக்கறைகளையும் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். டைல்ஸ்களை சுத்தம் செய்யும்போது, இன்னும் அதிக தண்ணீர் சேர்த்து பயன்படுத்தலாம். ஹார்பிக், பினாயில் போன்ற இரசாயனப் பொருட்கள் இல்லாத போதும், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே டாய்லெட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: