தேய்ந்து போன பழைய சோப் இருக்கா? இதை மட்டும் செய்தால் உங்க வீட்டு டாய்லெட்டை அடிக்கடி கிளீன் பண்ண வேண்டாம்!
உங்கள் டாய்லெட்டை எப்போதும் பளிச்சென்று வைத்திருக்க ஒரு சூப்பரான வழி இருக்கிறது. இதற்கு தேவைப்படுவது நீங்கள் தூக்கி எறியும் பழைய அல்லது பயன்படுத்தப்படாத குட்டி சோப்பு துண்டுகள் மட்டுமே!
உங்கள் டாய்லெட்டை எப்போதும் பளிச்சென்று வைத்திருக்க ஒரு சூப்பரான வழி இருக்கிறது. இதற்கு தேவைப்படுவது நீங்கள் தூக்கி எறியும் பழைய அல்லது பயன்படுத்தப்படாத குட்டி சோப்பு துண்டுகள் மட்டுமே!
நீங்கள் டாய்லெட்டை அடிக்கடி சுத்தம் செய்ய சிரமப்படுகிறீர்களா? கறைகள் படிந்து மஞ்சள் நிறமாக மாறுகிறதா? கவலை வேண்டாம்! உங்கள் டாய்லெட்டை எப்போதும் பளிச்சென்று வைத்திருக்க ஒரு சூப்பரான வழி இருக்கிறது. இதற்கு தேவைப்படுவது நீங்கள் தூக்கி எறியும் பழைய அல்லது பயன்படுத்தப்படாத குட்டி சோப்பு துண்டுகள் மட்டுமே!
Advertisment
கட்டிங் போர்டு எடுத்து, அதில் பயன்படுத்தப்படாத குளியல் சோப் துண்டுகளை (சின்ன துண்டுகள் அல்லது பயன்படுத்த முடியாத அளவு சிறிய சோப் துண்டுகள்) எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இரண்டு ஸ்பூன் அளவு நறுக்கிய சோப் துண்டுகள் போதும். மீதமுள்ளவற்றை சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
இப்போது ஒரு சிறிய ஜூஸ் பாட்டில் அல்லது வாட்டர் பாட்டில் எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் நறுக்கிய சோப் துண்டுகளைச் சேர்க்கவும். அடுத்து, ஒரு ஸ்பூன் சமையல் சோடா (பேக்கிங் சோடா) மற்றும் ஒரு ஸ்பூன் ஷாம்பு (டவ், கிளீனிங் பிளஸ், பாண்டின், அல்லது எந்த ஷாம்புவாக இருந்தாலும் சரி) சேர்க்கவும். சிறிய ஷாம்பு பாக்கெட்டுகளைப் பயன்படுத்தினால், ஒரு பாக்கெட் ஷாம்பு சேர்க்கலாம்.
Advertisment
Advertisements
கத்தியை சூடாக்கி, பாட்டிலின் அடியில் சுற்றி சிறிய ஓட்டைகளை போடவும். இந்த ஓட்டைகள் வழியாக தண்ணீர் உள்ளே சென்று சோப் கரைசல் வெளியேற உதவும். பாட்டிலை மூடி, டாய்லெட் ஃப்ளஷ் டேங்கை திறந்து, இந்த பாட்டிலை ஒரு ஓரமாக உள்ளே வைக்கவும்.
நீங்கள் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்யும் ஒவ்வொரு முறையும், இந்த பாட்டிலில் இருந்து சோப் கரைசல் வெளியாகி டாய்லெட்டை தானாகவே சுத்தம் செய்யும். இது குறைந்தது 10 நாட்களுக்கு மேல் வரும். சோப், பேக்கிங் சோடா மற்றும் ஷாம்பு கலவையானது கிருமிகளை அழித்து, துர்நாற்றத்தை நீக்கி, டாய்லெட்டை எப்போதும் பளிச்சென்றும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். மஞ்சள் அல்லது உப்பு கறைகள் படியாமல் தடுத்து, நல்ல வாசனையையும் அளிக்கும்.
இந்த எளிய குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் வீடு, குறிப்பாக சின்க் மற்றும் டாய்லெட் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கலாம். இந்த டிப்ஸ் உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!