முகத்தில் திட்டு திட்டாய் அழுக்கு... தக்காளி கூட கொஞ்சம் தேன் சேர்த்து; ஒருமுறை ட்ரை பண்ணுங்க!

தக்காளி மற்றும் தேன் சேர்த்து சிம்பிளான ஃபேஸ்பேக் எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி பொலிவாக காட்சியளிக்கும்.

தக்காளி மற்றும் தேன் சேர்த்து சிம்பிளான ஃபேஸ்பேக் எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி பொலிவாக காட்சியளிக்கும்.

author-image
WebDesk
New Update
Honey tomato face pack

முகத்தில் உதட்டுக்கு கீழே, மூக்கு பகுதியில் உள்ள கருப்பு திட்டு இருக்கிறதா, கவலையே படாதீர்கள். தக்காளியில் இந்த இனிப்பு பொருளை சேர்த்து அப்ளை பண்ணுங்க, முகத்தில் கருமை நீங்கும், பிரைட்டா மாறும். அதை எப்படி செய்வது என்று விரிவாகப் பார்ப்போம் வாருங்கள். உங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்கி, சருமத்தை பளபளப்பாக்க ஒரு எளிய இயற்கை முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறையை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள், உங்களுக்கு திருப்திகரமான மாற்றம் தெரியும். இதனை எப்படி செய்வது என்று ஷெரீஸ்ஹோம் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

தக்காளி
தேன்

பயன்கள்: தேன் ஒரு சிறந்த இயற்கை ப்ளீச் ஏஜென்ட் ஆகும். இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவுகிறது. தக்காளியுடன் தேன் கலந்து பயன்படுத்தும்போது, இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இரண்டு முறை பயன்படுத்தியாலே உங்களுக்கு கண்கவர் மாற்றம் தெரியும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு தக்காளியை எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் கருமை உள்ள பகுதிகளில் தடவவும். இரண்டு முறை இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். சருமத்தை தேய்த்து உரிப்பதன் மூலம் கருமையைப் போக்க முடியாது. இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் எளிதாக கருமையைப் போக்கலாம்.  

வெயில் காலத்தில் நம் சருமம் அடிக்கடி வறண்டு போகும். போதுமான நீர்ச்சத்து இல்லாததால் இவ்வாறு சருமம் வறட்சியாக காட்சியளிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதேபோல், முகம் கருமையாக மாறி விடும். சிலருக்கு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படவும் தொடங்கும். இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் வெயில் காலத்தில் அதிகமாக இருக்கும். அதற்காக வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருக்கவும் முடியாது. நம் அன்றாட பணிகளை செய்து முடிக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கும்.

Advertisment
Advertisements

இந்த சூழலில் சருமத்தை சீராக பராமரிப்பதற்கு விலை உயர்ந்த ஃபேஸ் கிரீம், சீரம், டோனர் போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று சிலர் கருதுவார்கள். இத்தகைய பொருட்களை வாங்கினாலும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள் மூலமாக ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்கிற தயக்கமும் சிலரிடம் இருக்கும். அந்த வகையில் வீட்டிலேயே எளிமையான இந்த முறையை பின்பற்றி முகத்தில் இருக்கும் கருமையை போக்கி பொலிவாக மாற்ற முடியும்.

Skincare benefits of tomatoes Skincare

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: