முகத்தைப் பளபளப்பாக்குவதற்கும், கருமையைப் போக்குவதற்கும் நிறைய பேர் எளிய வழிகளைக் கேட்பதுண்டு. அதற்கான ஒரு சூப்பர் டெக்னிக் இதோ! தக்காளியில் உள்ள வைட்டமின் சி, ஏ, கே மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்குப் பல நன்மைகளை அள்ளித் தருகின்றன.
தக்காளியைப் பயன்படுத்தி முகத்தைப் பொலிவாக்கும் அற்புதமான வழிமுறைகளை இங்கு விளக்குகிறார் டாக்டர் ராஜா.
Advertisment
தக்காளி எப்படி உதவுகிறது?
தக்காளியில் இயற்கையாகவே சாலிசிலிக் அமிலம் மற்றும் லைக்கோபீன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்திற்குப் பல நன்மைகளைச் செய்கின்றன. குறிப்பாக, தக்காளி ஒரு சிறந்த ஆன்டி-அஸ்ட்ரின்ஜென்ட் ஆக செயல்படுகிறது. அதாவது, நாம் முகத்தில் ஏதாவது பூசுவதற்கு முன், முகத்தைச் சுத்தம் செய்ய கிளென்சர் அல்லது டோனர் பயன்படுத்துவோம் அல்லவா? அதே வேலையைத் தக்காளி இயற்கையாகவே செய்கிறது. இது சருமத்தை அழுக்குகளிலிருந்து சுத்தம் செய்து, துளைகளை இறுக்கமாக்க உதவுகிறது.
Advertisment
Advertisements
எப்படி பயன்படுத்துவது?
ஒரு தக்காளியை எடுத்து இரண்டாக வெட்டி, உங்கள் முகத்தில் நன்கு தேய்க்கவும். அப்படியே 10 முதல் 15 நிமிடங்கள் வரை விடவும் அல்லது பேக் போல அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். சர்க்கரை சேர்த்துத் தேய்க்கும் முறைகளும் உள்ளன, ஆனால் ஆரம்பத்தில் வெறும் தக்காளியை மட்டும் பயன்படுத்துவது போதும்.
பலன்கள்:
இந்த எளிய முறையைத் தொடர்ந்து 10 நாட்களுக்குச் செய்து பாருங்கள். உங்கள் முகம் நல்ல பளபளப்புடன், பிரகாசமாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள். சருமத்தின் கருமை நீங்கி, பொலிவு பெறுவதை நிச்சயம் காணலாம்.