ரொம்பவும் ஈஸியான சட்னி இதுதான்: தக்காளி சட்னி செய்முறை

tomato chutney preparation, tomato chutney basics, tomato chutney receipe : தோசை, இட்டலி அல்லது இட்லி , சப்பாத்தி, பூரி எனப்பல விதமான உணவுகளுடன் கலந்து சாப்பிடுலாம்

how to make tomato chutney video: மிகவும் எளிமையான முறையில் சுவையான தக்காளி சட்னி எவ்வாறு செய்வது என்பதை இங்கே காண்போம்.  இதனை தோசை, இட்டலி அல்லது இட்லி , சப்பாத்தி, பூரி எனப்பல விதமான உணவுகளுடன் கலந்து சாப்பிடுலாம்

தேவையான பொருட்கள்:

தக்காளி (நடுத்தர), தோராயமாக நறுக்கப்பட்ட – 4
கறிவேப்பிலை – 1 ஸ்ப்ரிக்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து  பருப்பு – ½ டீஸ்பூன்                                        வெந்தயம் – ½ டீஸ்பூன்
பெருங்காயம் – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
எண்ணெய் (தேங்காய் அல்லது எள்) – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை: 

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.   பிறகு மிதமான தீயில் உளுந்தம் பருப்பை வதக்கவும். 20 விநாடிகளில் அவை  பொன்னிறமாகிவிடும். அப்போது, வெந்தயம், பெருங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.  பின்பு, கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக    சேர்க்கவும்.

அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். சில நிமிடங்களில் தக்காளி நன்கு வதங்கி விடும்.

தக்காளி வதங்கியவுடன் அதன் சாறும், எண்ணெய்யும் தனியாக பிரியும்.  அவ்வளவுதான் தக்காளி சட்னி ரெடி!

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம்.

 

 

இந்த, அறுசுவை தக்காளி சட்னிக்கு, பின்வருவனவற்றில் ஏதேனும் சேர்க்ககலாம்:

பூண்டு
இஞ்சி
வெங்காயம்                                                                                  கொத்தமல்லி இலைகள்
வெல்லம் அல்லது சர்க்கரை
தேங்காய் (அரைத்த)
பச்சை மிளகாய்
பச்சை தக்காளியை கூட நீங்கள் பயனபடுத்தலாம்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tomato chutney preparation tomato chutney basics tomato chutney receipe

Next Story
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com