Tomato Chutney Recipe : எப்போதும் ஒரேபோன்ற தக்காளி சட்னியை வைத்து சலித்துபோனவர்களுக்கு, நிச்சயம் இந்த காரசாரமான புளிப்பான தக்காளி சட்னி வித்தியாசமாக இருக்கும். ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்.
தேவையான பொருள்கள்
பெரிய தக்காளி - 2 அல்லது 225 முதல் 250 கிராம்
இஞ்சி (நறுக்கியது) - 1 இன்ச்
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 2 முதல் 3
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 4 முதல் 5
கிராம்பு - 2 முதல் 3
பெருங்காயத்தூள் (விரும்பினால் மட்டும்) - சிறிதளவு
எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - அரைப்பதற்குத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
உலர் சிவப்பு மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - ½ டீஸ்பூன்
வெந்தயம் - 2 முதல் 3
பெருங்காயத்தூள் - 1 பிஞ்ச்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய்யைச் சூடாக்கி, அதில் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
அதன் நிறம் மாறியதும், உடைந்த உலர்ந்த சிவப்பு மிளகாய், கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் இஞ்சி சேர்க்கவும். சிவப்பு மிளகாய் நிறம் மாறும் மாற்றும் வரை வறுக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளி, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
தக்காளி மென்மையாகும் வரை கிளறி நன்கு வதக்கவும். குறைந்த தீயில் சுமார் 6 முதல் 7 நிமிடங்கள் வரை நிச்சயம் வதக்கவேண்டும்.
இந்தத் தக்காளி கலவை குளிர்ந்ததும், அவற்றை மிக்சி அல்லது சிறிய பிளெண்டரில் சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும்.
தாளிப்பதற்கு
தக்காளி வதக்கிய அதே கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும்.
பிறகு கடுகு சேர்த்து அவற்றை வெடிக்க விடவும்.
கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயத்தூள் மற்றும் உடைந்த சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
இதனோடு அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட்டை சேர்க்கவும்.
குறைந்த தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வரை இதனை வதக்கவும். சுவை சரிபார்த்து, தேவைப்பட்டால் அதிக உப்பு சேர்க்கவும்.
அவ்வளவுதான் சுவையான தக்காளி சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை, ஊத்தப்பம் அல்லது வடை வகைகளுடன் இணைத்து சாப்பிடலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"