ஒரேபோன்ற தக்காளி சட்னி செய்து சலித்துவிட்டதா? தக்காளியோசு வெங்காயம் மற்றும் தேங்காய் கலந்து இதுபோன்ற முறையில் ஒருமுறை சட்னி செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருள்கள்
நறுக்கிய தக்காளி - 1/2 கப்
அரைத்த தேங்காய் - 1/4 கப்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
முழு உலர்ந்த காஷ்மீரி சிவப்பு மிளகாய், துண்டுகளாக உடைக்கப்பட்டது - 4
கறிவேப்பிலை - 5 முதல் 6
தோலுரிக்கப்பட்ட வெங்காயம் - 8
உப்பு - தேவையான அளவு
செய்முறை
சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் சில நொடிகள் வதக்கவும்.
பிறகு, தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
இறுதியாகத் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 1 முதல் 2 நிமிடங்கள் நடுத்தர தீயில் வதக்கி, நன்கு குளிர்விக்கவும்.
குளிர்ந்ததும், மென்மையாகும் வரை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அவ்வளவுதான், தேங்காய் தக்காளி சட்னியை உடனடியாக தோசை அல்லது இட்லியுடன் பரிமாறலாம். இதனை 2 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்தும் பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"