மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் தக்காளி தேங்காய் சட்னி!

Simple Thakkali Chutney சுவையான புளிப்பான தக்காளி சட்னி

Tomato Coconut Chutney Simple Thakkali Chutney Easy Chatni Tamil
Tomato Coconut Chutney Simple Thakkali Chutney Easy Chatni Tamil

ஒரேபோன்ற தக்காளி சட்னி செய்து சலித்துவிட்டதா? தக்காளியோசு வெங்காயம் மற்றும் தேங்காய் கலந்து இதுபோன்ற முறையில் ஒருமுறை சட்னி செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருள்கள்

நறுக்கிய தக்காளி – 1/2 கப்
அரைத்த தேங்காய் – 1/4 கப்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
முழு உலர்ந்த காஷ்மீரி சிவப்பு மிளகாய், துண்டுகளாக உடைக்கப்பட்டது – 4
கறிவேப்பிலை – 5 முதல் 6
தோலுரிக்கப்பட்ட வெங்காயம் –  8
உப்பு – தேவையான அளவு

செய்முறை

சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் சில நொடிகள் வதக்கவும்.

பிறகு, தக்காளி மற்றும் வெங்காயம் சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

இறுதியாகத் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 1 முதல் 2 நிமிடங்கள் நடுத்தர தீயில் வதக்கி, நன்கு குளிர்விக்கவும்.

குளிர்ந்ததும், மென்மையாகும் வரை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான், தேங்காய் தக்காளி சட்னியை உடனடியாக தோசை அல்லது இட்லியுடன் பரிமாறலாம். இதனை 2 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்தும் பயன்படுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tomato coconut chutney simple thakkali chutney easy chatni tamil

Next Story
இன்ஸ்டன்ட் ரசம்: சில நிமிடங்களில் சூப்பரான டேஸ்ட்Healthy food tamil news how to prepare rasam recipe with simple ingredients
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com