இனி நீங்க தக்காளி இல்லாம சமைக்கலாம்.
சாம்பார், ரசம், புளிக் குழம்பு, நான் வெஜ் என எதுவாக இருந்தாலும் தக்காளி இல்லாமல் சமைக்க முடியாது. ஒருவேளை உங்கள் வீட்டில் தக்காளி காலியாகி விட்டால் இனி கவலைப்பட வேண்டாம்.
இந்த மாதிரி சமயங்களில், தக்காளிக்கு பதிலாக, இந்த உணவுப் பொருட்கள் உங்களுக்கு உதவும்.
மாங்காய் பொடி
இது தக்காளியைப் போல சுவை உடையது, மேலும் விலை மலிவானது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கறியில் ஒரு டீஸ்பூன் அல்லது தேவையான அளவு மாங்காய் பொடி சேர்த்தால் போதும். பச்சை மாங்காயும் சேர்க்கலாம்.
புளி
தக்காளிக்குப் பதிலாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய மற்றொரு மூலப்பொருள் புளி..
சிறிது புளியை 15-20 நிமிடங்கள் ஊறவைத்து, கூழ் பிரித்தெடுத்து விதைகளை அகற்றவும். சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டி, உங்கள் கறிகளில் சேர்க்கவும். புளி கறியை கெட்டியாக்கவும் உதவுகிறது, எனவே பரிமாறும் முன் உங்கள் உணவின் கன்சிஸ்டன்சி சரிபார்க்கவும்.
நெல்லி
தக்காளிக்குப் பதிலாக நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம், ஆனால் அது சற்று புளிப்பாகவும் இருக்கும், எனவே கறியில் சேர்க்கும்போது அளவு குறித்து கவனமாக இருங்கள். சர்க்கரையுடன் தண்ணீரில் ஊறவைக்க பரிந்துரைக்கப்படுகிறது, பிறகு எந்த கறியிலும் சேர்க்கவும்,
தயிர்
தக்காளிக்கு பதிலாக, நீங்கள் சாதாரண தயிர் சேர்க்கலாம். தயிரின் அமிலச் சுவை மசாலாப் பொருட்களுடன் நன்றாகக் கலந்து உங்களுக்கு ஒத்த சுவையைத் தருகிறது. சுவையில் சரியானதாக இருக்க, 2-3 நாட்கள் பழமையான தயிர் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் சுவையில் சிறிது புளிப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“