வழக்கமான குழம்பு மாதிரி இல்லாமல் சுவையும், ஆரோக்கியமும் கலந்த ரெசிபி இது.
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் சோம்பு
சின்ன வெங்காயம் 20 நறுக்கியது
பூண்டு பற்கள் 10
கறிவெப்பிலை கொஞ்சம்
4 தக்காளி
தேவையான அளவு உப்பு
1/8 டீஸ்பூன் மஞ்சள் பொடி
முக்கால் டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
அரை டீஸ்பூன் சீரகத்தூள்
அரை டேபிள் ஸ்பூன் கறி மசாலா தூள்
4 கப் தண்ணீர்
அரை டீஸ்பூன் அரிசி மாவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் சோம்பு சேர்க்கவும். சின்ன வெங்காயம், பூண்டு நறுக்கியதை தொடர்ந்து சேர்த்து வதக்கவும். தொடர்ந்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி நறுக்கியதை சேர்க்கவும். வெந்துகொண்டிருக்கும்போது உப்பு சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள்பொடி, மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக அரிசி மாவை கரைத்துவிடவும். ரொம்ப ருசியான தக்காளி குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“