மொறு மொறு தக்காளி தோசை, இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
கொஞ்சம் இஞ்சி
சின்ன துண்டு இஞ்சி
3 தக்காளி
3 கப் தண்ணீர்
அரை கப் பொடி ரவை
அரை கப் அரிசி மாவு
அரை கப் கோதுமை மாவு
1 கப் நறுக்கிய வெங்காயம்
1 கொத்து கொத்தமல்லி நறுக்கியது
செய்முறை : மிக்ஸியில் சீரகம், மிளகாய் தூள், இஞ்சி துண்டு, உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து அதில் தக்காளி சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதை ஒரு பாத்திரத்தில் இதை சேர்த்து, ரவை, அரிசி மாவு, கோதுமை மாவு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் சேர்த்து கிளரவும். 15 நிமிடங்கள் கழித்து, எண்ணெய் ஊற்றி தோசை சுட்டு எடுக்கவும்.