Advertisment

டேஸ்டி... ஹெல்தி..! 5 நிமிடங்களில் பூண்டு- தக்காளி சட்னி

Tomato Garlic Healthy Chutney ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா, சமுக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்ட ஆரோக்கிய தக்காளி பூண்டு சட்னி எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
red chilli chutney recipe chilli chutney recipe

red chilli chutney recipe chilli chutney recipe

Tomato Garlic Chutney Recipe Tamil : சுவையான சைடு டிஷ்ஷாக இருப்பது மட்டுமல்லாமல், ஏராளமான சட்னி வகைகள் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் அமைகிறது. கொரோனா போன்ற வைரஸுகள் அதிகளவில் பரவி வரும் இந்தக் காலகட்டத்தில், சட்னி வகைகளிலும் ஆரோக்கிய பொருள்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம். அந்த வரிசையில் ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா, சமுக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்ட ஆரோக்கிய தக்காளி பூண்டு சட்னி எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

தக்காளி - 1

பூண்டு பற்கள் - 4

பச்சை மிளகாய் - 1

நல்லெண்ணெய் - 1/2 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

சர்க்கரை - ஒரு சிட்டிகை

செய்முறை

* தக்காளி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை லேசாக வறுத்துக்கொள்ளவும்

* வருத்தக் கலவையோடு எண்ணெய், உப்பு மற்றும் சர்க்கரையை ஒன்றாகச் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்தெடுத்தால், சுவையான சட்னி ரெடி.

இந்த சட்னியின் நற்குணங்கள்

தக்காளி, வைட்டமின்கள் மற்றும் glutathione நிறைந்தது. மேலும், புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்க உதவுகிறது. ப்ரீபயாடிக், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்திகொண்ட பூண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment