Advertisment

ஒரு லேயர் தக்காளி கெட்ச் அப்: துருப்பிடித்த பித்தளை, காப்பர், வார்ப்பிரும்பு பாத்திரங்களை இப்படி கிளீன் பண்ணுங்க

உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் சில ஸ்மார்ட் தக்காளி கெட்ச்அப் ஹேக்ஸ் இங்கே உள்ளன.

author-image
WebDesk
New Update
Tomato ketch up freepik

Tomato ketchup cleaning tips

தக்காளி கெட்ச்அப் உங்கள் உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமல்லாமல், சமையலறை குழாய்களில் இருந்து துருப்பிடித்த கறைகளை சுத்தம் செய்யவும், கருகிய பாத்திரங்களை சரிசெய்யவும் முடியும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

Advertisment

உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் சில ஸ்மார்ட் தக்காளி கெட்ச்அப் ஹேக்ஸ் இங்கே உள்ளன.

காப்பர் பாத்திரங்களை சுத்தம் செய்ய

பெரும்பாலான இந்திய வீடுகளில் காப்பர் பாத்திரங்கள் பொதுவானவை, ஆனால் அவற்றை சுத்தம் செய்வது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம். துருப்பிடித்த அல்லது கருகிய பாகங்களில் தக்காளி கெட்ச்அப்பைத் தேய்ப்பதன் மூலம் இதை சரி செய்யலாம்.

காப்பர் பாத்திரத்தில் தக்காளி கெட்ச் அப் தேய்த்து, 3-4 மணி நேரம் அப்படியே வைக்கவும். எலுமிச்சை சாறு மற்றும் வெதுவெதுப்பான நீரில் துடைத்து, லிக்குவட் டிஷ்வாஷ் கொண்டு பாத்திரங்களை கழுவுங்கள், மேஜிக்கை பாருங்கள்

குழாய்                                       

rust tap                        

துருப்பிடித்த குழாயில் மேற்பரப்பில் ஒரு திக் லேயர் சாஸை தடவி சில மணி நேரம் அப்படியே வைக்கவும்.

மணிக்கணக்கில் தொடாமல் விடுவதுதான். பின்னர் ஸ்கிரப்பரை எலுமிச்சை, வினிகர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றின் கரைசலில் நனைத்து ஸ்க்ரப் செய்யவும்.

வார்ப்பிரும்பு பாத்திரங்கள், பானைகள்

வார்ப்பிரும்பு பாத்திரங்கள் அடிக்கடி துருப்பிடித்த புள்ளிகளை உருவாக்குகின்றன, இவற்றைப் போக்க எளிதான வழி தக்காளி கெட்ச்அப்பை ஒரு சூடான கடாயில் பிரஷை பயன்படுத்தி ஒரு லேயர் தடவி -4 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

உப்பில் நனைத்த அரை எலுமிச்சையைப் பயன்படுத்தி அதை அகற்றவும். நன்றாக தேய்த்து, மாற்றத்தைப் பாருங்கள்.

பித்தளை கட்லரி சுத்தம் செய்ய

brass puja set

பித்தளை கட்லரி மற்றும் பாத்திரங்கள் பழைய உடைமை, ஆனால் அவற்றை சுத்தம் செய்வது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம். உங்கள் வழக்கமான கெட்ச்அப் பழமையான கறைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று வருத்தப்பட வேண்டாம், கெட்ச்அப் மற்றும் உப்பைக் கரைத்து, வித்தியாசத்தைக் காண அதை ஸ்க்ரப் செய்யவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment