ஃபிரைட் ரைஸ் சமைக்க, தக்காளி கெட்ச்-அப் சேர்ப்பது ஒரு வழக்கமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் உங்களுக்குப் பிடித்த கெட்ச்-அப், உணவின் ருசியை அதிகப்படுத்துவதை விட அதிகம் செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?
தக்காளி கெட்ச்அப் உங்கள் உணவை ருசியாக்குவது மட்டுமல்லாமல் பழைய பாத்திரங்களை சுத்தம் செய்யவும் முடியும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் ஸ்மார்ட் தக்காளி கெட்ச்அப் ஹேக்ஸ் இங்கே உள்ளன.
வார்ப்பிரும்பு பாத்திரங்கள் மற்றும் பானைகள்
வார்ப்பிரும்பு பாத்திரங்கள் அடிக்கடி துருப்பிடித்த புள்ளிகளை உருவாக்குகின்றன. இவற்றைப் போக்க எளிதான வழி தக்காளி கெட்ச்அப்பை ஒரு சூடான கடாயில் தூரிகையைப் பயன்படுத்தி ஒரு லேயர் தடவி மணி நேரம் அப்படியே வைக்கவும். உப்பில் நனைத்த அரை எலுமிச்சையைப் பயன்படுத்தி அதை அகற்றவும். நன்றாக தேய்த்து மாற்றத்தைப் பாருங்கள்.
காப்பர் பாத்திரங்களை சுத்தம் செய்ய
பெரும்பாலான இந்திய வீடுகளில் காப்பர் பாத்திரங்கள் பொதுவானவை. ஆனால் அவற்றை சுத்தம் செய்வது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம். துருப்பிடித்த அல்லது கருகிய பாகங்களில் தக்காளி கெட்ச்அப்பைத் தேய்ப்பதன் மூலம் இதை சரி செய்யலாம்.
காப்பர் பாத்திரத்தில் தக்காளி கெட்ச் அப் தேய்த்து 1 மணி நேரம் அப்படியே வைக்கவும், எலுமிச்சை சாறு மற்றும் வெதுவெதுப்பான நீரில் துடைத்து லிக்குவட் டிஷ்வாஷ் கொண்டு பாத்திரங்களை கழுவுங்கள், மேஜிக்கை பாருங்கள்.
பித்தளை கட்லரி சுத்தம் செய்ய
பித்தளை கட்லரி மற்றும் பாத்திரங்கள் பழைய உடைமை. ஆனால் அவற்றை சுத்தம் செய்வது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம். உங்கள் வழக்கமான கெட்ச்அப் பழமையான கறைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். கெட்ச்அப் மற்றும் உப்பைக் கரைத்து அதை ஸ்க்ரப் செய்து கழுவவும். வித்தியாசத்தைக் காணவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“