Advertisment

வெங்கடேஷ் பட் சொன்ன மாதிரி பச்சை தக்காளி கூட்டு செய்யுங்க: கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க

வெங்கடேஷ் பட் செய்வது போல் பச்சை தக்களி கூட்டு நீங்களும் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
aeea

வெங்கடேஷ் பட் செய்வது போல் பச்சை தக்களி  கூட்டு நீங்களும் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும். 
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் 1 மூடி
2 ஸ்பூன் பச்சை மிளகாய் 
1 ஸ்பூன் சீரகம் 
தேங்காய் எண்ணெய் 3 
1 ஸ்பூன் கடுகு 
6 வத்தல் மிளகாய் 
3 ஸ்பூன் நறுக்கிய பூண்டு 
2 வெங்காயம் நறுக்கியது
பச்சை தக்காளி 8 
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
1 கொத்து கருவேப்பிலை 
உப்பு 
50 கிராம் பாசி பருப்பு 
20 கிராம் கடலை பருப்பு
1 ஸ்பூன் பெருங்காயப் பொடி 

Advertisment

செய்முறை : மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கடுகு, கருவேப்பிலை, வத்தல் சேர்க்கவும். தொடர்ந்து பூண்டு நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து வெங்காயம் நறுக்கியதை சேர்த்து கிளர வேண்டும். பிறகு தக்காளி நறுக்கியதை சேர்த்து நன்றாக வேகும் வரை கிளர வேண்டும். அரைத்த விழுதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் மஞசள் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து அவித்த பாசி பருப்பு, கடலை பருப்பை சேர்த்து கிளரவும். கடைசியாக பெருங்காயப் பொடி, மேலாக 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கிளரவும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment