இந்த தக்காளி குழம்பு செய்ய அதிக நேரம் தேவைப்படாது. சுவை நல்லா இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 2
தக்காளி - 4
பூண்டு - 6
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 2ஸ்பூன்
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
காஷ்மீரி சில்லி - 1 ஸ்பூன்
சாம்பார் தூள் - 1 ஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கடாய் எடுத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இவற்றுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கிய பின்னர், மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் (காரத்திற்கேற்ப), காஷ்மீரி சில்லி, சாம்பார் தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்தும் வதக்கி கீழே இறக்கவும்.
இவை ஆறிய பிறகு 10 நிமிடங்கள் கழித்து மிக்ஸ்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு வதக்கிய அதே கடாயில் மீண்டும் இட்டு சூடேற்றி பரிமாறவும். அல்லது கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றுடன் தாளித்து கீழே இறக்கி பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“