சுவையான தக்காளி குருமா செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
மசாலா அரைக்க தேவையானவை
தேங்காய் - 1/2 கப் துருவியது
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பொட்டுக் கடலை - 2 ஸ்பூன்
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
குருமா செய்ய
எண்ணெய் - 3 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை, கல்பாசி, ஜாவித்ரி - சிறிதளவு
வெங்காயம் - 1
பூண்டு இடித்தது - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
தக்காளி - 6
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை
முதலில், மசாலா விழுது அரைக்க ஒரு மிக்ஸி எடுத்து துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்க வேண்டும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், பிரியாணி இலை, பட்டை, கல்பாசி, ஜாவித்ரி சேர்த்து வதக்கவும். அதில் இடித்த பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறிவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்கவிடவும். கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான தக்காளி குருமா தயார்.