வழக்காமன பூரி போல் இல்லாமல் இந்த தக்காளி பூரி வித்தியாசமாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் மைதா
கோதுமை மாவு – ஒன்றரை கப்
தக்காளி – 2
சீரகத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- அரை டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை
தக்காளி, சீரகத்தூள், உப்பு, மிளகாய்தூள், எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். இதை வடிகட்ட வேண்டும். பிறகு சிறிதளவு மைதா மாவை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதி மைதா மற்றும் கோதுமை மாவை மற்றும் இந்த கலவையை கலந்து பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே எடுத்து வைத்திருக்கும் மைதாமாவில் புரட்டி, சிறிய பூரிகளாக சுட்டு எடுக்கவும்.