சுவையான தக்காளி பூரி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
ரவை – 1/4 கப்
உப்பு – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
சமையல் சோடா – 1 ஸ்பூன்
புதினா – 4 இலை
அரைத்த தக்காளி – 1 கப்
சீரகம் – 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகாய் தூள், எண்ணெய், சமையல் சோடா, புதினா ஆகியவற்றை சேர்த்து கலந்து தக்காளி அடித்து கலவையை ஊற்றவும். எல்லாவற்றையும் சேர்த்து மாவாக பிசையவும். எப்போதும் போல் மாவை 15 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் தேய்க்கவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூரி போட்டு எடுக்கவும்.அவ்வளவு தான் சுவையான தக்காளி பூரி ரெசிபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“