ஒரு முறை இப்படி தக்காளி ரசம் செய்து பாருங்க. இது செப் தாமுவின் அசத்தலான ரெசிபி. இந்த ரெசிபியை 40 லட்சம் பேர் யூடியூபில் பார்த்துள்ளனர்.
தேவையான பொருட்கள்
தக்காளி 3
பூண்டு 8
2 கிளாஸ் தண்ணீர்
மிளகு 2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
கருவேப்பிலை 2 கொத்து
கடுகு 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 ஸ்பூன்
அரை கரண்டி நல்லெண்ணை
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தக்காளி, தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். மேலும் நன்றாக பிசைந்த பிறகு தோலை மட்டும் நீக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, வத்தல், பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து இதில் தக்காளி பிசைந்து வைத்ததை சேர்த்து உப்பு சேர்க்கவும். இதை கிளரவும். ஒரு கொதிவந்ததும், இடித்த பூண்டு, இடித்த சீரகம்,மிளகு, கருவேப்பிலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கொத்தமல்லி இலை நறுக்கியதை சேர்த்து கிளரவும். அதிக நேரம் ரசத்தை கொதிக்க வைக்கக்கூடாது.