அசத்தும் சுவையில் தக்காளி சாதம். ஒரு முறை இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
தக்காளி – 3
நல்லெண்ணை – 3 ஸ்பூன்
புளி – சிறிய அளவு
சீரகம் 1/ 2 ஸ்பூன்
தனியா 1 ஸ்பூன்
எள்ளு ½ ஸ்பூன்
கடுகு ½ ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
1 ஸ்பூன் கடலை
4 முந்திரி
மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
அரை ஸ்பூன் மிளகாய் பொடி
பச்சை மிளாய் 3
செய்முறை : இட்லி பாத்திரத்தில், 3 தக்காளி, புளி, சீரகம் , தனியா, எள்ளு சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து இதை அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலை பருப்பு, முந்திரி சேர்த்து வறுத்து எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, அரைத்த தக்காளி சேர்க்கவும். தொடர்ந்து மிளகாய் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து அவித்த சாதத்தை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அவறுத்த முந்திரி- கடலைகளை சேர்த்து கிளரவும்.