Tomato Rice Recipe, Tomato Rice Home Cooking Tamil Video: தக்காளி சாதம், சுலபமாக- குறைந்த நேரத்தில் செய்யத்தக்க ஒரு உணவு ஆகும். இப்போதைய விலை மலிவான காய்கறியாகவும் தக்காளி இருக்கிறது. அலுவலகம் செல்கிறவர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறவர்கள் காலையில் அவ்வப்போது தக்காளி சாதம் செய்து கொள்வது உசிதம்.
அடிக்கடி செய்யவேண்டிய சூழல் உருவாகலாம் என்பதால் தக்காளி சாதத்தை வெரைட்டியாகவும், சுவையாகவும் செய்வது முக்கியம். அந்த வகையில் ஸ்பெஷல் தக்காளி சாதம் எப்படி செய்வது? என இங்கு பார்க்கலாம்.
ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்யத் தேவையான பொருட்கள் : உதிராக வடித்த சாதம் – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 6, பச்சை மிளகாய் – 3, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தலா – சிறிதளவு, கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு
பொடி செய்துகொள்ள (முதல் வகை) : பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, கசகசா- 2 டீ ஸ்பூன், முந்திரி – 6, எண்ணெய் – 1 டீஸ்பூன்.
மற்றொரு வகை பொடி செய்ய: தனியா, துவரம் பருப்பு தலா – 2 டீ ஸ்பூன், மிளகாய் வற்றல் – 4, கொப்பரை தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.
ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்முறை வருமாறு: பொடி செய்யக் கொடுக்கப்பட்டுள்ள 2 வகைகளை வெறும் கடாயில் தனித்தனியாக போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.
வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்து போட்டு தாளியுங்கள். பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். தக்காளி குழைய வதங்கியதும் இறக்கி விடலாம்.
இந்த தொக்கை சாதத்தில் சேருங்கள். அதனுடன் பொடித்த 2 பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் நன்றாக கலந்து விடுங்கள். இப்போது சுவையான ஸ்பெஷல் தக்காளி சாதம் தயார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Tomato rice recipe tomato rice home cooking tamil video
முதல் முறையாக காதலை கூறிய குஷி… அன்பு ரியாக்ஷன் என்ன? க்யூட் வீடியோ
தேர்தல் நெருக்கத்தில் அரசு பஸ் ஸ்டிரைக் ஏன்? தொமுச பொருளாளர் பேட்டி
கொரோனா வைரஸால் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் இத்தாலியர்கள்
போன வாரம் தான் லவ் ஸ்டோரி சொன்னாரு.. மானசாவை கரம் பிடித்த சூப்பர் சிங்கர் அபிலாஷ்!
இந்தியாவில் கடலுக்கு அடியில் முதல் சுரங்கப் பாதை: ஏன், எப்படி அமைக்கிறது அரசு?