Advertisment

5 நிமிட தக்காளி சாதம்... கேள்விப் பட்டிருக்கீங்களா?

விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு தக்காளி சாதம் தான் சிறந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tomato rice recipe tomato rice recipe in tamil

tomato rice recipe tomato rice recipe in tamil

tomato rice recipe ,tomato rice recipe in tamil : குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது எப்போது பார்த்தாலும் தோசை, இட்லி என்று செய்து கொடுத்து, அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு போர் அடித்திருக்குமோ, இல்லையோ, அதை சமைத்துக் கொடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக போர் அடித்திருக்கும்.

Advertisment

ஆகவே அந்த தோசை, இட்லிக்கு பதிலாக அவர்களுக்கு மிகவும் சுவை மிக்கதாக, விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு தக்காளி சாதம் தான் சிறந்தது. இந்த தக்காளி சாதத்தில், தக்காளி அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும்.

tomato rice recipe செய்முறை :

* தக்காளி, கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

* தக்காளியானது ஓரளவு வதங்கியதும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

* தக்காளி கலவையானது தொக்கு போன்று சுருங்கும். அப்போது அதனை இறக்கி, அதில் சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment