வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் கே 1 நிறைந்த தக்காளி, ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் அருமருந்து!
சருமத்தை மின்னச் செய்யும் தக்காளி, அழுக்கை நீக்கி புத்துணர்வு அளிக்கிறது. வெயிலால் வந்த கருமையையும் போக்கி சருமத்தை குளிர்ச்சியாக்குகிறது.
கோடைக்கு ஏற்ற தக்காளி - தேன் ஃபேஸ் பேக்:
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2021-11-24T115109.872.jpg)
தேன் கலந்த தக்காளி ஃபேஸ் பேக், சுருக்கங்கள், மெல்லிய கோடுகளை குறைப்பதில் வல்லமை பெற்றது. தக்காளியின் வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை கூட்டி சரும செல்களின் சேதத்தை சரிசெய்கிறது. தேனும் தக்காளியும் சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது.
எப்படி பயன்படுத்துவது?
ஒரு மசித்த தக்காளியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். காய்ந்ததும் சிறிது நேரம் கழித்து கழுவவும்.
பளபளக்கும் சருமத்திற்கு, தக்காளியை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!