tomato soup recipe tomato soup recipe in tamil : மாலை வேளையில் சூப் குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதிலும் சூப் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், சூப் குடித்தால் நல்லது. சூப்பில் பல வகைகள் உள்ளன. அதில் தக்காளி சூப் மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் அதை செய்வதும் மிகவும் ஈஸியானது.
Advertisment
நன்கு பழுத்த தக்காளி – 5
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
Advertisment
Advertisements
சோள மாவு – 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை;
வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் வெண்ணெயை இரண்டு தேக்கரண்டி போட்டு,அதில் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பூண்டு வதங்கியதும், அடுத்து வெங்காயம் அதையும் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும். தக்காளியின் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிட்டு பின் கொதித்ததும் மத்து அல்லது கரண்டியால் நன்றாக மசித்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் சேர்த்து, பின் அதில் தண்ணீரில் கரைத்த சோள மாவைக் கலக்கவும். பின்னர் ஐந்து நிமிடம் கொதித்த பின் இறக்கியதும் அதனுடன் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil