சுவை நிறைந்த பழுத்த தக்காளி, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சமையல் குறிப்புகளின் முதுகெலும்பாகும். விலை கொடுத்து வாங்கினாலும் தக்காளியை அதிக நாள் சேமிக்க முடியாது. ஃபிரிட்ஜில் சேமித்தாலும் சில நாட்களில் அழுகிவிடும்.
தக்காளி நீண்ட நாட்கள் புதிதாக இருக்க அவற்றை எப்படி சேமிப்பது?
நம்மில் பெரும்பாலோர் தக்காளியை ஃபிரிட்ஜில் சேமிக்க விரும்புகிறோம், ஆனால் செஃப் பங்கஜ் பதூரியா கூற்றுப்படி, அவற்றை சேமிப்பதற்கு இது சரியான வழி அல்ல.
தக்காளி தண்டு கீழே இருக்குமாறு, வெளியே சேமித்து வைக்கவும்.
தக்காளி வாங்கி வந்த உடன் அதன் காம்பு பகுதியில் ஒரு சொட்டு நெய் தடவி விடவும். நெய் தடவியபகுதி அடியில் இருக்குமாறு அதை அடுக்கி வைத்துவிட்டால் போதும். இதை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. வெளியில் வைத்தாலே ஒரு வாரம் வரையில் தக்காளி புதிதாக இருக்கும், என்று பதூரியா கூறினார்.
தக்காளியை தலைகீழாக சேமித்து வைப்பதன் மூலம் அவற்றின் ஆயுளை சிறிது நீட்டிக்க முடியும் என்று செஃப் வைபவ் பார்கவா கூறுகிறார், ஆனால் அவை பழுத்திருந்தால் சமைக்க பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் அவற்றைப் பழுக்க வைக்க விரும்பினால் அதை ஃபிரிட்ஜின் கதவுக்கு அருகில் உள்ள மேல் அலமாரியில் வைக்க வேண்டும், ஏனெனில் அந்த இடம் கொஞ்சம் சூடாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“