நாக்கு ஊறும், தக்காளி தொக்கு. இது எல்லாதுக்கும் சூப்பர் சைடிஷா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 டீஸ்பூன் கடுகு
1 டீஸ்பூன் வெந்தயம்
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
கால் கிலோ பெரிய வெங்காயம்
கால் டீஸ்பூன் உப்பு
50 கிராம் அளவு புளி
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
15 பூண்டு
நல்லெண்ணை 3 ஸ்பூன்
கடுகு
சீரகம்
4 வத்தல்
பெருங்காயத் தூள்
கருவேப்பிலை ஒரு கொத்து
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும். குக்கரில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். வெங்காயத்தில் உப்பு சேர்த்து வதக்கவும். குக்கரில் 3 விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து அதை அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து அதில் மிளகாய் பொடி, பூண்டு சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை ஊற்றி, அதில் கடுகு, சீரகம், வத்தல் சேர்த்து வதக்கவும். இதில் அரைத்த விழுதை சேர்க்கவும். தொடர்ந்து இதில் உப்பு சேர்த்து கிளரவும். இது 3 மாதம் வரை கெட்டுப்போகாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“