ஒரு முறை இப்படி தக்காளி தொக்கு செய்து பாருங்க. செய்வதும் செம்ம ஈசிதான்.
தேவையான பொருட்கள்
தக்காளி - 5
சிவப்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1/2 தேக்கரண்டி
வறுக்க
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 3/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை
எண்ணெய்யில் வெந்தயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்பிறகு அதனைக் குளிரவைக்கவும். தக்காளியைக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய்யைச் சூடாக்கி, அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கருகவிடாமல் வறுக்கவும்.அதனோடு நறுக்கிய தக்காளி, அனைத்து தூள்கள் மற்றும் உப்பு சேர்க்கவும். அடுப்புத் தீயைக் குறைத்து இந்தக் கலவையை நன்கு கலந்துவிடவும். இதனை 5-8 நிமிடங்கள் சமைக்கவும்.
வெல்லம் மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த நிலையில் தேவைப்பட்டால் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு (1-2 நிமிடங்கள்), ஒரு கட்டத்தில், எண்ணெய் வெளியேறத் தொடங்கும்.அடுப்பை அணைத்துக் குளிர்வித்தால் சூடான சுவையான தொக்கு ரெடி. இதனை ஃப்ரிட்ஜில் வைத்துத் தேவைப்படும் நேரத்தில் உபயோகிக்கலாம்.