ஒரு முறை செப் தீனா செய்வது போல கும்பகோணம் தக்காளி ஊறுகாய், நீங்களும் ஈசியா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி – அரை கிலோ
மிளகாய் பொடி- 25 கிராம்
உப்பு
காயப் பொடி ¾ ஸ்பூன்
வெல்லம் – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
நல்லெண்ணை- 30 எம்.எல்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தக்காளியை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். 15 முதல் 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வக்கவும். தொடர்ந்து சூடு ஆறியதும், தக்காளியின் தோலை நீக்கவும். ஒரு பாத்திரத்தில், எண்ணெய் சேர்த்து, கடுகு சேர்க்கவும். தொடர்ந்து தக்காளியை சேர்த்து, நன்றாக உடைத்துவிட்டு வேக வைக்கவும். தக்காளி நன்றாக மசிந்து வேக 20 நிமிடங்கள் வரை கிளரவும். தொடர்ந்து இதில் உப்பு, வெல்லம், பெருங்காயத்தூள் சேர்த்து கிளரவும். நன்றாக எண்ணெய் விட்டதும். கடைசியாக மிளகாய் பொடி சேர்த்து கிளரவும். மிளகாய் தூள் சேர்த்து அதிக நேரம் சமைக்க வேண்டாம்.