சில சமயம் தக்காளி விலை வானத்துக்கு ஏறிவிடும், அப்படியான தக்காளியை பல நாள் கெட்டுப்போகமாக வைத்திருக்க கொஞ்சூண்டு உப்பு போதும், இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
தக்காளி இல்லாத சமையல் யோசிக்க முடியாத அளவுக்கு நம்முடைய எல்லா சமையலிலும் தக்காளி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தக்காளி சில நேரங்களில் ஆப்பிள் விலையைவிட அதிக அளவில் விற்பனையான வரலாறு உண்டு. அதே போல, விலை குறைந்தால் அதல பாதாளத்திற்கும் சரிந்ததும் உண்டு. தக்காளியின் விலை பிரச்னை ஒரு புறம் என்றால், கொஞ்சம் கூடுதலாக தக்காளியை வாங்கி வந்தால், 2 3 நாட்களிலேயே அழுகிப் போவதும் உண்டு. ஃபிரிட்ஜ்கூட தக்காளி நீண்ட நாள் கெடாமல் இருக்க உதவுவதில்லை.
ஆனால், இப்போது தக்காளியை பல நாள் கெட்டுப்போகமாக வைத்திருக்க கொஞ்சூண்டு உப்பு போதும், இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் பிரெஷ்ஷாக வாங்கி வந்த தக்காளி அழுகாமல், கெட்டுப்போகாமல் வைத்திருக்க இந்த முறையை ட்ரை பண்ணி பாருங்கள். பிரெஷ்ஷாக வாங்கி வந்த தக்காளியை நன்றாகக் கழுவிவிட்டு, பிறகு ஒரு பவுலில் தூள் உப்பு போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அதில், ஒவ்வொரு தக்காளியை உருட்டி உருட்டி உப்புத் தூள் தக்காளி மேலே ஒட்டியிருக்கும் விதமாக எடுத்து, தக்காளியை வைக்கக்கூடிய பேஸ்கெட்டில், தக்காளியின் காம்புப் பகுதி கீழ்நோக்கி இருக்கும்படி வையுங்கள். இதனால், தக்காளி கெட்டுப் போகாமல் பல நாள் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
அழுகிப்போன தக்காளியை உடன் வைக்காதீர்கள். தக்காளியில் காம்பு இருந்தாலும் அதை அகற்றிவிட்டு உப்பு தடவி வையுங்கள். தக்காளி கெட்டுப் போகாமல் பல நாள் ஃபிரெஷ்ஷாக இருக்கும். உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.