கிடுகிடுவென உயரும் தக்காளி விலை; 6 மாதங்களுக்கு கெடாமல் சேமிக்க 5 அருமையான வழிகள்

தக்காளியை 6 மாதங்களுக்கு எப்படிச் சேமிப்பது எனச் சில எளிய வழிகளைத் தெரிந்துகொண்டால், விலை ஏறினாலும் கவலைப்படத் தேவையில்லை. இதோ, உங்கள் சமையல் செலவைக் குறைக்கும் அந்த 5 அருமையான டிப்ஸ் இதோ.

தக்காளியை 6 மாதங்களுக்கு எப்படிச் சேமிப்பது எனச் சில எளிய வழிகளைத் தெரிந்துகொண்டால், விலை ஏறினாலும் கவலைப்படத் தேவையில்லை. இதோ, உங்கள் சமையல் செலவைக் குறைக்கும் அந்த 5 அருமையான டிப்ஸ் இதோ.

author-image
WebDesk
New Update
tomatoes 1

தக்காளியைப் பதப்படுத்த 5 அருமையான வழிகள்

சமையலறையின் ராஜா தக்காளி என்று சொல்லலாம். ஏனென்றால், தக்காளி இல்லாத சமையலே இல்லை என்றாகி விட்டது. அனால், தக்காளி விலை, சில சமயங்களில் நம் இதயத்துடிப்பை எகிறச் செய்துவிடும். 'அரை தக்காளியைத்தான் குழம்பில் போட முடியுமா?' என நாம் யோசிக்கும்போது, அதை 6 மாதங்களுக்கு எப்படிச் சேமிப்பது எனச் சில எளிய வழிகளைத் தெரிந்துகொண்டால், விலை ஏறினாலும் கவலைப்படத் தேவையில்லை. இதோ, உங்கள் சமையல் செலவைக் குறைக்கும் அந்த 5 ஸ்மார்ட் டிப்ஸ்.

தக்காளியைப் பதப்படுத்த 5 அருமையான வழிகள்:

Advertisment

பல்வேறு விதமான சமையலுக்கு, வெவ்வேறு வகையில் தக்காளியைப் பயன்படுத்துவோம். ஒரே முறையில் சேமித்தால், எல்லா உணவுகளுக்கும் பயன்படுத்த முடியாது. அதனால், இங்குப் பல வழிகளில் தக்காளியை எப்படிப் பதப்படுத்தி வைக்கலாம் எனப் பார்ப்போம்.

1. உறைந்த தக்காளி (Frozen Tomatoes):

இது ஒரு எளிமையான வழி. தக்காளி விலை குறைவாக இருக்கும்போது, உங்களுக்குத் தேவையான அளவு வாங்கி, நன்கு கழுவி, ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும். பின்பு, அதை ஒரு காற்று புகாத கொள்கலனில் போட்டு, ஃபிரீசரில் வைத்துவிடலாம். இப்படிச் செய்தால், 6 மாதங்களுக்குப் புதிதாக இருக்கும். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தலாம்.

2. தக்காளி பேஸ்ட் (Tomato Paste):

தக்காளியை ஒரு வருடம் வரை சேமிக்க இது ஒரு சிறந்த வழி. தக்காளியை அப்படியே அரைக்காமல், முதலில் கொதிக்கும் நீரில் வேகவிட வேண்டும். பின்பு, அதன் தோலை நீக்கி, ஆறவைத்து, கல் உப்பு சேர்த்து பேஸ்டாக அரைக்க வேண்டும். உப்பு சேர்ப்பதால், கெட்டுப்போகாமல் இருப்பதுடன், சுவையும் அதிகரிக்கும். இதை கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துப் பயன்படுத்தலாம்.

3. தக்காளி பவுடர் (Tomato Powder):

Advertisment
Advertisements

இது சற்று வித்தியாசமான, ஆனால் பல உணவுகளுக்குப் பயன்படும் முறை. தக்காளியை மெல்லிய துண்டுகளாக நறுக்கி, வெயிலில் வைத்து மொறுமொறுப்பாகும் வரை காயவைக்க வேண்டும். வெயில் இல்லாதபோது, ஓவனில் வைத்தும் காயவைக்கலாம். காய்ந்ததும், அதை மிக்ஸியில் போட்டுப் பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இதை சூப், தோசை எனப் பலவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

4. நொதிக்க வைத்தல் (Fermented Tomatoes):

இது வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் புரோபயாடிக் முறை. இதற்குச் சிறிய செர்ரி தக்காளிகள் மிகவும் ஏற்றவை. தக்காளியை நன்கு கழுவி, ஒரு கண்ணாடி பாட்டிலில் வெந்நீருடன் வினிகர் கலந்து, அதில் தக்காளியைப் போட்டு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இதை அப்படியே ஊறுகாய் போலச் சாப்பிடலாம் அல்லது சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

5. காய்ந்த தக்காளி (Dried Tomatoes):

தக்காளியைச் சிப்ஸ் போலக் காயவைத்து சேமிக்கும் முறை இது. தக்காளியை வட்டமாக அல்லது நீளமாக நறுக்கி, வெயிலில் நன்கு மொறுமொறுப்பாகும் வரை காயவைக்க வேண்டும். தேவைப்படும்போது, இதைச் சிறிது வெந்நீரில் ஊறவைத்தால், தக்காளி உப்பி வந்து, சமையலுக்குப் பயன்படுத்தத் தயாராகிவிடும்.

இந்த ஐந்து வழிகளில் ஒன்றைப் பின்பற்றி, தக்காளி விலை உயரும் பயம் இல்லாமல், உங்கள் சமையலில் தக்காளிக்குக் குறைவே இல்லாமல் பயன்படுத்தலாம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: