Advertisment

பாக்டீரியா அச்சம்! உங்க டூத் பிரஷை சோப்பில் கழுவ வேண்டுமா? பல் மருத்துவர் பதில்

சோப்பு, பாக்டீரியாவைக் கொல்லும் அதே வேளையில், சோப்பு எச்சங்களை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள், பல் துலக்குவதற்கான அதன் நன்மைகளை விட அதிகம், என்கிறார் டாக்டர் பி பார்த்தசாரதி ரெட்டி

author-image
WebDesk
New Update
toothbrush

Should you rinse your toothbrush with soap?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் பிரிஸ்ட்லில் குடியேறும் அபாயம் இருப்பதால், டூத் பிரஷ்களை கழிவறையில் வைத்திருப்பதற்கு எதிராக, சிலர் எச்சரிக்கின்றனர்.

Advertisment

இந்த சிக்கலைச் சமாளிக்க டூத் பிரஷை சோப்பு கொண்டு கழுவ சிலர் பரிந்துரைக்கின்றனர்.

ஒரு பல் மருத்துவராக டூத் பிரஷை சோப்பு கொண்டு கழுவுவதை நான் பரிந்துரைக்கவில்லை. சோப்பு, பாக்டீரியாவைக் கொல்லும் அதே வேளையில், சோப்பு எச்சங்களை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள், பல் துலக்குவதற்கான அதன் நன்மைகளை விட அதிகம், என்கிறார் டாக்டர் பி பார்த்தசாரதி ரெட்டி. (cosmetic dentist and founder of FMS Dental Hospitals)

டூத் பிரஷை சோப்பினால் கழுவினால் என்ன ஆகும்?

முதலாவதாக, சோப்பு எச்சங்களை உட்கொள்வதற்கான ஆபத்து உள்ளது, இது இரைப்பை குடல் அசௌகரியத்தை ஏற்படுத்தும். கூடுதலாக, சோப்பை நன்கு கழுவவில்லை என்றால், அது டூத் பிரஷில் விரும்பத்தகாத சுவையை விட்டுவிடும், இது ஒட்டுமொத்த பிரஷிங் அனுபவத்தை பாதிக்கும்.

மேலும், டூத் பிரஷில் எஞ்சியிருக்கும் சோப்பு எச்சங்கள், அனைத்து பாக்டீரியாக்களையும் திறம்பட அகற்றாது, இது வாய்வழி சுகாதாரம் பற்றிய கவலைகளுக்கு வழிவகுக்கும்.

toothbrush care

உங்கள் டூத் பிரஷை சுத்தமாக வைத்திருப்பது எப்படி?

சுத்தமாக வைத்திருக்கவும், பாக்டீரியா வளர்ச்சியைக் குறைக்கவும், ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் டூத் பிரஷை தண்ணீரில் கழுவவும், திறந்த பகுதியில் நிமிர்ந்து காற்றில் உலர வைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

பக்டீரியா வளர்ச்சிக்கு உகந்த ஈரமான சூழலை உருவாக்குவதால், டூத் பிரஷை கேப் கொண்டு மூட வேண்டாம். உகந்த வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க, ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை தவறாமல் மாற்றுவதன் முக்கியம்.

கூடுதல் முன்னெச்சரிக்கை தேவைப்படுபவர்களுக்கு, டூத் பிரஷ்களை ஆன்டி பாக்டீரியல் மவுத்வாஷில் ஊறவைக்க அல்லது டூத் பிரஷ் சானிடைசரை சாத்தியமான மாற்றாகப் பயன்படுத்தலாம்.

அடில் பாஸ்மன் நடத்திய 2016 ஆய்வின் படி, 50 சதவீத வெள்ளை வினிகரில் கழுவுவது வீட்டிலேயே டூத் பிரஷை கிருமி நீக்கம் செய்வதற்கான பயனுள்ள மற்றும் செலவு குறைந்த முறையாகும், என்று மருத்துவர் பார்த்தசாரதி ரெட்டி குறிப்பிட்டார்.

Read in English: Should you rinse your toothbrush with soap? Here’s what a dentist has to say

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment