நேஷனல் ஜியோகிராஃபிக் வெளியிட்ட 2022-ஆம் ஆண்டிற்கான டாப் 25 சுற்றுலா தலங்கள்!
வரும் 2022 ஆண்டில் எங்கு பயணிப்பது என்பது குறித்து உங்களுக்கு குழப்பம் இருந்தால், நேஷனல் ஜியோகிராஃபிக் 25 அற்புதமான இடங்களின் பட்டியலைத் தொகுத்துள்ளது.
வரும் 2022 ஆண்டில் எங்கு பயணிப்பது என்பது குறித்து உங்களுக்கு குழப்பம் இருந்தால், நேஷனல் ஜியோகிராஃபிக் 25 அற்புதமான இடங்களின் பட்டியலைத் தொகுத்துள்ளது.
இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு, வெளியேற முடியாமல் பல மாதங்களாக உள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சர்வதேச போக்குவரத்தும் முடங்கியது.
Advertisment
ஆனால் இப்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து, உலகெங்கிலும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், பயணிகள் அனைவரும் இறுதியாக தங்கள் பைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் ஊர்சுற்ற தயாராக உள்ளனர்.
ஆனால், வரும் 2022 ஆண்டில் எங்கு பயணிப்பது என்பது குறித்து உங்களுக்கு குழப்பம் இருந்தால், நேஷனல் ஜியோகிராஃபிக் 25 அற்புதமான இடங்களின் பட்டியலைத் தொகுத்துள்ளது. இயற்கை, சாகசம், கலாச்சாரம், நிலைத்தன்மை மற்றும் குடும்பம் ஆகிய ஐந்து பிரிவுகளை கொண்ட இந்தப் பட்டியல் சில மறக்க முடியாத மற்றும் மாறுபட்ட பயண அனுபவங்களை உங்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது.
கலாச்சார மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பாதுகாக்க கடந்த 50 ஆண்டுகளாக யுனெஸ்கோ உதவியதன் நினைவாக, இந்த பட்டியல் பல உலக பாரம்பரிய தளங்களை கொண்டாடுகிறது என்று நேஷனல் ஜியோகிராஃபிக் தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
நேஷனல் ஜியோகிராஃபிக்கின் ‘உலகின் சிறந்த 2022 சுற்றுலா தலங்களின் பட்டியல் இதோ!
கலாச்சாரம்
ஜிங்மாய் மலை, யுனான், சீனா (Jingmai Mountain, Yunnan, China)
டின் பென அலெய், லண்டன் (Tin Pan Alley, London)
ஹோக்கய்டோ, ஜப்பான் (Hokkaido, Japan)
ப்ரொசிடா, இத்தாலி (Procida, Italy)
அட்லண்டா, ஜார்ஜியா (Atlanta, Georgia)
நிலைத்தன்மை
ருர் பள்ளத்தாக்கு, ஜெர்மனி (Ruhr Valley, Germany)
யாசுனி தேசிய பூங்கா, ஈக்வடார் (Parque Nacional Yasuni, Ecuador)
லாட்ஸ், போலந்து (Lódz, Poland)
தேசிய கொலம்பியா கோர்ஜ், ஓரேகான்/வாஷிங்டன் (National Columbia Gorge Scenic Area, Oregon/Washington)
சிமானிமணி தேசிய பூங்கா, மொசாம்பிக் (Chimanimani National Park, Mozambique)