scorecardresearch

நேஷனல் ஜியோகிராஃபிக் வெளியிட்ட 2022-ஆம் ஆண்டிற்கான டாப் 25 சுற்றுலா தலங்கள்!

வரும் 2022 ஆண்டில் எங்கு பயணிப்பது என்பது குறித்து உங்களுக்கு குழப்பம் இருந்தால், நேஷனல் ஜியோகிராஃபிக் 25 அற்புதமான இடங்களின் பட்டியலைத் தொகுத்துள்ளது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு, வெளியேற முடியாமல் பல மாதங்களாக உள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சர்வதேச போக்குவரத்தும் முடங்கியது.

ஆனால் இப்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து, உலகெங்கிலும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், பயணிகள் அனைவரும் இறுதியாக தங்கள் பைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் ஊர்சுற்ற தயாராக உள்ளனர்.

ஆனால், வரும் 2022 ஆண்டில் எங்கு பயணிப்பது என்பது குறித்து உங்களுக்கு குழப்பம் இருந்தால், நேஷனல் ஜியோகிராஃபிக் 25 அற்புதமான இடங்களின் பட்டியலைத் தொகுத்துள்ளது. இயற்கை, சாகசம், கலாச்சாரம், நிலைத்தன்மை மற்றும் குடும்பம் ஆகிய ஐந்து பிரிவுகளை கொண்ட இந்தப் பட்டியல் சில மறக்க முடியாத மற்றும் மாறுபட்ட பயண அனுபவங்களை உங்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது.

கலாச்சார மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பாதுகாக்க கடந்த 50 ஆண்டுகளாக யுனெஸ்கோ உதவியதன் நினைவாக, இந்த பட்டியல் பல உலக பாரம்பரிய தளங்களை கொண்டாடுகிறது என்று நேஷனல் ஜியோகிராஃபிக் தெரிவித்துள்ளது.

நேஷனல் ஜியோகிராஃபிக்கின் ‘உலகின் சிறந்த 2022 சுற்றுலா தலங்களின் பட்டியல் இதோ!

கலாச்சாரம்

ஜிங்மாய் மலை, யுனான், சீனா (Jingmai Mountain, Yunnan, China)

டின் பென அலெய், லண்டன் (Tin Pan Alley, London)

ஹோக்கய்டோ, ஜப்பான் (Hokkaido, Japan)

ப்ரொசிடா, இத்தாலி (Procida, Italy)

அட்லண்டா, ஜார்ஜியா (Atlanta, Georgia)

நிலைத்தன்மை

ருர் பள்ளத்தாக்கு, ஜெர்மனி (Ruhr Valley, Germany)

யாசுனி தேசிய பூங்கா, ஈக்வடார் (Parque Nacional Yasuni, Ecuador)

லாட்ஸ், போலந்து (Lódz, Poland)

தேசிய கொலம்பியா கோர்ஜ், ஓரேகான்/வாஷிங்டன் (National Columbia Gorge Scenic Area, Oregon/Washington)

சிமானிமணி தேசிய பூங்கா, மொசாம்பிக் (Chimanimani National Park, Mozambique)

இயற்கை

கப்ரிவி ஸ்ட்ரிப், நமீபியா (Caprivi Strip, Namibia)

வடக்கு மினசோட்டா (Northern Minnesota)

பைக்கால் ஏரி, ரஷ்யா (Lake Baikal, Russia)

பெலிஸ் மாயா வனம் (Belize Maya Forest Reserve)

விக்டோரியா, ஆஸ்திரேலியா (Victoria, Australia)

சாகசம்

செய்னே ரிவர் பைக் ட்ரெய்ல், பிரான்ஸ் (Seine River Bike Trail, France)

கோஸ்ட்டா ரிக்கா (Costa Rica)

நெபிசிகிட் மிக்மா ட்ரெய்ல், நியூ ப்ரன்ஸ்விக்(Nepisiguit Mi’gmaq Trail, New Brunswick, Canada)

பலாவ் (Palau)

அரபாஹோ பேசின், கொலராடோ(Arapahoe Basin, Colorado)

குடும்பம்

டான்யூப் ரிவர் க்ரூஸ் (Danube River Cruise)

லிசியா, துருக்கி (Lycia, Turkey)

கிரனாடா, ஸ்பெயின் (Granada, Spain)

பொனயர் (Bonaire)

கிழக்கு கடற்கரை, மேரிலாந்து (Eastern Shore, Maryland)

இன்னும் எதுக்கு காத்துட்டு இருக்கீங்க!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Top 25 travel destinations for 2022 national geographic revealed

Best of Express