scorecardresearch

Chennai Beaches: சென்னையில் நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய 5 கடற்கரைகள்!

Top 5 Beaches in Chennai: முட்டுக்காடு கடற்கரை, சிறந்த பொழுதுபோக்கு இடமாகும். அமைதியும், அழகும் நிறைந்த இந்த கடற்கரையில், வின்ட் சர்பிங், கனோ, கயாக், பெடல் படகு, ரோ படகு போன்றவை மிகவும் பிரபலமானவை

Tamil Nadu Beaches: Top 5 Beaches in Tamil Nadu, Popular Tamil Nadu Beaches, Famous Beaches in Tamil Nadu - தமிழகத்தில் நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய 5 கடற்கரைகள்!
Tamil Nadu Beaches: Top 5 Beaches in Tamil Nadu, Popular Tamil Nadu Beaches, Famous Beaches in Tamil Nadu – தமிழகத்தில் நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய 5 கடற்கரைகள்!

5 Best Beaches to Visit in Chennai: தமிழகத்தின் சுற்றுலாத்தளங்களாக கடற்கரை நகரங்கள் முக்கிய இடம்பிடிக்கின்றன. கடற்கரையோரம் நடந்து அதன் குளிர்ச்சியை அனுபவிக்கும் சுகமே தனி.

இந்நிலையில், சென்னையின் மிகச் சிறந்த கடற்கரை சுற்றுலா நகரங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

மெரினா கடற்கரை!

வெண் மணல் மற்றும் கடல் அலைகள், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சிகளை காணத்துடிக்கும் மக்களால் மெரினா பீச் எப்பொழும் பரபரப்பாக இருக்கின்றது.

உலகின் 2வது பெரிய கடற்கரையான இது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து என்பது குறிப்பிடத்தக்கது.

கோவளம் கடற்கரை!

சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ளது கோவளம் கடற்கரை.
இங்குதான் ஆலிவ் ரிட்லி ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் வந்து முட்டைகள் இட்டுகின்றன.
இந்தக்கடற்கரையில் மிகப்பழமை வாய்ந்த தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கோவில்கள் உள்ளது.

பெசண்ட்நகர் கடற்கரை

பெசண்ட்நகர் கடற்கரை, ம சுக்களை ஈர்க்கும் சுற்றுலாத்தளங்களில் ஒன்று.
இங்கு உள்ள கடைத் தெருக்களில் இருக்கும் அழகான கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் போன்றவை பிரபலமானவை.

முட்டுக்காடு கடற்கரை!

முட்டுக்காடு கடற்கரை, சிறந்த பொழுதுபோக்கு இடமாகும். அமைதியும், அழகும் நிறைந்த இந்த கடற்கரையில், வின்ட் சர்பிங், கனோ, கயாக், பெடல் படகு, ரோ படகு போன்றவை மிகவும் பிரபலமானவை.
சென்னையிலிருந்து ஒரு மணிநேரப் பயணத்தில் இக்கடற்கரைக்கு சென்றுவிடலாம்.

மகாபலிபுர கடற்கரை!

தமிழகத்தின் மிகப்பிரபலமான இடங்களில் ஒன்றான மகாபலிபுர கடற்கரை, உலகப் ப‌ராம்பரியச் சின்னங்களில் ஒன்று.

இங்கு காணப்படும் புகழ் பெற்ற குடைவரைக் கோயில்கள், பஞ்ச பாண்டவர் இரதங்கள், அர்ஜூனனின் தவம் போன்றவை சிறப்பானவை.

மேலும் சாகச தண்ணீர் விளையாட்டுப் பிரியர்களுக்கு இவ்விடம் ஓர் சிறந்த இடம் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Top 5 beach in chennai for tourist visit