கிச்சனில் சமைக்கும்பொது நமக்கு ஒருசில கிச்சன் ஹேக்ஸ் தெரியாமல் இருக்கும். அவற்றை தெரிந்து கொண்டு சமைத்தால் இன்னி உங்கள் கிச்சன் க்ளீனாக இருக்கும். டாப் 5 கிச்சன் ஹேக்ஸ் பற்றி பல்லாண்டு வாழ்க யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
டிப்ஸ் 1: கிழங்கு வகைகளை சமைக்கும்போது உப்பு கலந்த நீரில் 10 நிமிடம் ஊறவிட்டு வேக வைத்து எடுத்தால் சீக்கிரம் மிருதுவாக வெந்துவிடும்.
டிப்ஸ் 2: மோர் மீதமானால் அதில் பிரட் துண்டுகள் போட்டு ஊறவிட்டு தாளித்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
டிப்ஸ் 3: அரிசி கழுவிய நீரில் கிழங்கு வேகவைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
டிப்ஸ் 4: பொறித்த உணவுகளை ரொட்டி மேல் வைத்தால் எண்ணெய் உறிந்துவிடும். அதுமட்டுமின்றி பலகாரம் காயாமல் இருக்கும்.
தினமும் ஐந்து சமையல் குறிப்புகள்
டிப்ஸ் 5: காலிஃபிளவர் சமைக்கும்போது அரைமணி நேரம் முன் இலைகளை நறுக்கி உப்பு கலந்த நீரில் காலிஃபிளவரை ஊறவைத்தால் போதும் அதில் உள்ள பூச்சிக்கள் இறந்து போயிடும்.
இனி சமைக்கும்போது இவற்றை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.