/indian-express-tamil/media/media_files/2025/09/11/screenshot-2025-09-11-145824-2025-09-11-14-58-46.jpg)
இரத்த நாளங்களில் சிக்கல் ஏற்பட்டால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் குறைவதால் இதயம் மற்றும் மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதம் வரக்கூடும். அதே நேரத்தில் சிறுநீரக நோயால் உடலில் கழிவுகள் சேர்ந்து, இதயம் உட்பட பிற உறுப்புகள் பாதிக்கப்படலாம். இது ஆரம்பத்தில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாள்பட்ட சிறுநீரக நோயாக மாறும்போது இதய நோய் உள்ளிட்ட பிரச்சனைகள் உருவாகும்.
இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்
இதய ஆரோக்கியத்திற்காக, சோடியம் அளவை குறைத்து, பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள், குறைந்த கொழுப்பு பால் பொருட்கள், மெலிந்த இறைச்சி, மீன், டோஃபு மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளைச் சேர்க்க வேண்டும். அதிக கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது இதயத்துக்கும் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் அவசியம்
உடல் செயல்பாடு சுறுசுறுப்பாக இருப்பது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க செய்கிறது. தசை வலிமையை அதிகரிக்கிறது. இரத்தக்கொழுப்பு அளவை குறைக்கவும் செய்கிறது. உடல் செயல்பாடு இருக்கும் போது தூக்கத்தை மேம்படுத்தலாம். தீவிர அல்லது மிதமான உடல்பயிற்சி செய்யும் போது அது உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இவை இதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
உடலில் கொழுப்பை அளவை குறைப்பது இதயம் மற்றும் சிறுநீரக அபாயத்தையும் குறைக்கும்
உடலில் அதிகமான கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு காரணமாக இருக்கலாம். இரத்த பரிசோதனையின் மூலம் கொழுப்பு அளவை கண்டறியலாம். அதிகமாக இருந்தால், குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை உண்பது அவசியம்.குறைய மாத்திரைகள் எடுத்துகொள்ள அறிவுறுத்துவார்கள்.
இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியம் மேம்பட உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும்
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சிகிச்சை திட்டம் கவனமாக பின்பற்ற வேண்டும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்த மாத்திரைகள் ஆஞ்சியோடென்சின் மாற்றும் என்சைம் தடுப்பான்கள் அல்லது ஆஞ்சியோடென்சின் ஏற்பி தடுப்பான்கள் என்று சொல்லப்படுகின்றன. இது இதயத்தை பாதுகாக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க உறுதிப்படுத்தும் வழிமுறைகளை மருத்துவரின் வழிகாட்டுதலோடு பின்பற்றுவது இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு உதவும்.
சர்க்கரை நோயாளிகள் இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும்?
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதால் கண்கள், நரம்புகள், இதயம், சிறுநீரகங்கள் போன்ற உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. இதற்கு உணவு, உடல் எடை, வாழ்க்கை முறை மற்றும் மருந்துகளை சரியாக பின்பற்றுவது அவசியம்.
புகைப்பழக்கம் இதயம் மற்றும் சிறுநீரகத்தை சேதமாக்கும்
புகைப்பிடிக்கும் பழக்கம், இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளைத் தவிர்க்க விரும்பினால், இந்த பழக்கத்தை விடுவது மிக முக்கியம். புகைபிடிப்பு, கரோனரி தமனி நோய் மற்றும் நெஃப்ரோசை ஏற்படுத்தி, இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படச் செய்து, சிறுநீரகத்தில் கடினம் அல்லது சேதத்தை உருவாக்கும்.
இதய நோய் சிறுநீரக நோய்க்கான ஆபத்து காரணிகள் ஏதேனும் உண்டா என்பதை அறிந்துகொள்வது முன்கூட்டியே அபாயத்தை கண்டறிய உதவும். அதனோடு வேறு உடல் நல பிரச்சனைகளையும் கண்டறிவதன் மூலம் உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.