குமரி பக்கம் டூர் போறீங்களா? இந்த 5 இடங்களை மிஸ் பண்ணாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!
கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறவிடக் கூடாது 5 முக்கியமான இடங்கள் இந்தத் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை சுற்றுலா செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறவிடக் கூடாது 5 முக்கியமான இடங்கள் இந்தத் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை சுற்றுலா செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
கோடை விடுமுறை என்றாலே சுற்றுலாவிற்கான நேரம் தான். அதன்படி தென்மாவட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருப்பவர்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வர விரும்புகின்றனர்.
Advertisment
கன்னியாகுமரி என்று கூறினாலே திருவள்ளுவர் சிலை, தொட்டி பாலம் போன்ற சில இடங்கள் தான் நம் நினைவிற்கு வரும். ஆனால், அவற்றுக்கும் மேலாக இன்னும் பல இடங்கள் கன்னியாகுமரியில் இருக்கின்றனர். அதன்படி கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் அவசியம் செல்ல வேண்டிய சில இடங்களை இந்தக் குறிப்பில் காணலாம்.
அதன்படி, சின்ன முட்டம் துறைமுகம் பகுதியை சுற்றுலா பயணிகள் கட்டாயம் கண்டுகளிக்க வேண்டும். இந்த இடம் கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து அருகில் அமைந்துள்ளது. எனவே, கன்னியாகுமரிக்கு வருபவர்கள் அவசியம் இந்த இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.
அடுத்தபடியாக, அருவிக்கரைக்கும் நிறைய சுற்றுலா பயணிகள் செல்வதில்லை. ஆனால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உற்சாகமாக நேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற இடமாக இது அமையும். நீர்நிலைகளை விரும்புபவர்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும்.
Advertisment
Advertisements
இதற்கு அடுத்த இடத்தில் லெமுர் கடற்கரை இடம்பெறுகிறது. சிறப்பான சுற்றுலா தலமாக இருந்தாலும், இந்த இடம் குறித்து நிறைய மக்களுக்கு தெரிவதில்லை. எனவே, கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தப் பகுதி நிச்சயம் ஏற்றதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இதேபோல், கன்னியாகுமரிக்கு செல்பவர்கள் பெருஞ்சிலம்பு பகுதிக்கும் சென்று பார்வையிடலாம். தக்கலை அருகே இப்பகுதி அமைந்துள்ளது. இதுவும் நீர்நிலைகளை விரும்புபவர்களுக்கு பிடித்தமாக இருக்கும். இது தவிர மலைப்பாங்கான இடத்தை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நெட்டாவிற்கு செல்லலாம். புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ளவர்ளுக்கு இந்த இடம் சரியான தேர்வாக இருக்கும்.