/indian-express-tamil/media/media_files/2025/09/29/download-49-2025-09-29-13-25-26.jpg)
புரோட்டீன் என்பது நம் உடலுக்கான அடிப்படை ஊட்டச்சத்து ஆகும், இது உடலின் கட்டமைப்பு மற்றும் குறிப்பாக தசைகள் வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பலர் புரதத்தை எப்படித் தக்கவாறு எடுத்துக் கொள்வது தெரியாமல் தவறாக உணவை உட்கொள்கிறார்கள். தினசரி உடலின் தேவையான புரதத்தை பெறுவதற்கு, கீழ்க்கண்ட ஸ்நாக்ஸ்கள் உதவியாக இருக்கும்.
கொண்டைக்கடலை ரோஸ்ட்
கடையிலிருந்து எண்ணெய் நிறைந்த பொரித்த உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் குறைந்த எண்ணெய் பயன்படுத்தி, ஆரோக்கியமாக புரோட்டீன் நிறைந்த கொண்டைக்கடலை ரோஸ்ட் செய்து சாப்பிடலாம். கொண்டைக்கடலை வேகவைத்து, அதிலிருந்து தண்ணீரை முழுமையாக வடித்த பிறகு, சிறிது ஆலிவ் ஆயில், மிளகாய் தூள், உப்புடன் சேர்த்து நன்கு வறுத்து சாப்பிடலாம்.
முட்டை சாலட்
மிகவும் வழக்கமாக நம்மால் வெஜிடபிள்களால் சாலட் செய்து சாப்பிடப்படும். அதேபோல், முட்டையையும் ஆம்லெட் அல்லது பொடிமாஸ் போல சமைத்து சாப்பிடுவோம். ஆனால் முட்டையை வைத்து சாலட் செய்து சாப்பிடலாம் என்பதைக் குறைவாகவே அறிந்திருப்போம். முட்டை என்பது நம்முடைய தினசரி புரோட்டின் தேவையை பூர்த்தி செய்ய ஒரு எளிய மற்றும் சிறந்த தேர்வாகும். இதற்காக, 2 அல்லது 3 வேகவைத்த முட்டைகளை ஸ்பூன் கொண்டு நன்றாக மசிக்கவும். அதில் சிறிது தயிர், ஆர்கனோ போன்ற ஹெர்ப் மிக்ஸ், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலக்கினால், சத்தும் சுவையும் நிறைந்த எளிய எக் சாலட் தயார்!
பனீர் ரோஸ்ட்
இந்த பனீர் ரோஸ்ட் ஒரு ஹெல்தியான புரோட்டீன் ரிச் உணவாக evening snacks ஆகவோ அல்லது light dinner ஆகவோ எடுத்துக்கொள்ளலாம். இதைச் செய்ய அதிக நேரமே வேண்டாம் — 5 முதல் 10 நிமிடங்களில் சுலபமாகத் தயார் செய்ய முடியும். பனீரை சின்ன சதுர துண்டுகளாக நறுக்கி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா, இஞ்சி-பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி மேரினேட் செய்ய வேண்டும். மேரினேட் செய்த பனீரை ஸ்க்யூவரில் குத்தியோ அல்லது தோசைக்கல்லில் நேரடியாக வையோ, எல்லா பக்கங்களிலும் லைட் ரோஸ்ட் செய்தால் சுவையான பனீர் ரோஸ்ட் ரெடி!
புரோட்டீன் ஸ்மூத்தி
தினசரி தேவையான புரோட்டீனை எடுக்க முடியவில்லை என பலர் கவலைப்படும் நேரத்தில், அதற்கான ஒரு எளிய மற்றும் ஸ்மார்ட் வழியாக புரோட்டீன் ஸ்மூத்தி அமைகிறது. இதற்கு கொஞ்சம் ஸ்பின்னாச், சிறிது பாதாம், முந்திரி, ஒரு வாழைப்பழம் மற்றும் தேவையான அளவு பாலை சேர்த்து அரைத்தாலே சத்தான ஸ்மூத்தி தயார். இதில் ஒரு ஸ்பூன் புரோட்டீன் பவுடர் சேர்த்தால், சுவையான ஸ்நாக்ஸ் போலவும் இருக்கும், அதே நேரத்தில் சுமார் 20–25 கிராம் புரோட்டீனும் உடலுக்கு கிடைக்கும்.
ஹம்மூஸ் அண்ட் வெஜ் ஸ்டிக்ஸ்
ஹம்மூஸ் என்பது கொண்டைக்கடலையை அடிப்படையாகக் கொண்டு மயோனைஸ்க்கு மாற்றாக தயாரிக்கப்படும், புரோட்டீனால் நிறைந்த ஒரு ஹெல்த்தி டிப் ஆகும். வெறும் சாலட் சாப்பிட பிடிக்காத நேரங்களில், கேரட் மற்றும் வெள்ளரிக்காயை நீளமாக பிரெஞ்ச் ஃப்ரைஸ்ஸாக நறுக்கி, அதை சாப்பிட சுவையாக மாற்றலாம். இதற்காக, வேகவைத்த கொண்டைக்கடலையுடன் 4 பூண்டு பற்கள், ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து ஹம்மூஸ் தயாரிக்கலாம். இந்த ஹம்மூஸில் அந்த வெஜிடபிள் ஸ்டிக்குகளைத் தோய்த்து சாப்பிடலாம்; இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்சாக இருக்கும்.
முளைகட்டிய பயறு
முளைகட்டிய பச்சைப்பயறு சாலட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு ஆரோக்கியமான சூப்பர் ஸ்நாக்ஸ் ஆகும். பாசிப்பயறில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளதுடன், அது முளைக்கும்போது நிறைய நுண்ணூட்டச்சத்துக்களும் அதிகரிக்கின்றன. இந்த முளைகட்டிய பயற்றுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் மாதுளை முத்துக்கள் சேர்த்து சாலட் செய்தால் சுவையும் சத்தும் கூடும். முளைகட்டிய பயறு தயார் நிலையில் இருந்தால், இந்த சாலட்டை வெறும் 5 நிமிடங்களில் சுலபமாக செய்து முடிக்கலாம்.
பீநட் பட்டருடன் வாழைப்பழம்
இந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸை தயாரிக்க ஐந்து நிமிடமும் தேவையில்லை, ஆனால் இது புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிறைந்த ஒன்று. வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் இருப்பதுடன், அதன் இனிப்பு சுவை திருப்திகரமாக உணர செய்யும். வாழைப்பழத்தை சிறிய வட்ட வடிவங்களில் நறுக்கி, இரண்டு துண்டுகளுக்கு நடுவில் சிறிது பீனட் பட்டரை வைத்து சாண்ட்விச் போல லேசாக அமுக்கி, குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலே சொன்ன ஏழு ஸ்நாக்ஸ்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 20 நிமிடங்களில் எளிதாக தயாரிக்க முடியும். இவை ஜங்க் உணவுகளுக்கு நன்றான, ஹெல்தியான மற்றும் புரோட்டீன் நிறைந்த விருப்பங்கள் ஆகும். நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளும் வாரம் தினமும் ஒன்றை சுவைத்து சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.