ஒரு சில சரும பிரச்சனைகளுக்கு நீரிழிவு நோய் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் அருண் கார்த்தி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார். இது பற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில் விரிவாக கூறியிருப்பதாவது,
தோல் அரிப்பு என்பது பல காரணங்களால் வரக்கூடியது. சர்க்கரை நோயாளிகளில் ஈஸ்ட் தொற்று, வறண்ட சருமம் அல்லது மோசமான சுழற்சி போன்றவை முக்கிய காரணமாக இருக்கலாம் என்கிறார்.
சர்க்கரை பிரச்சனை உள்ளவர்களுக்கு வரக்கூடிய முக்கியமான இரண்டு தோல் பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்.
1. diabetic dermopathy or diabetic shin's spots:
நீண்டகால சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால்களில் பொட்டு அளவிற்கு கருமை அல்லது பிரவுன் நிறத்தில் கருப்பு கருப்பாக இருக்கும். இதில் அரிப்பு, எரிச்சல் எதுவும் இருக்காது. வெறும் கருப்பு நிறத்தில் மட்டும் இருக்கும்.
உஷார்! கால்கள் கருப்படிப்பதற்கு 5 முக்கிய காரணங்கள் |TOP REASONS FOR BLACKENING OF LEGS |TREATMENT
கொஞ்சம் கொஞ்சமாக கால் முழுவதும் பரவி விடும். ரத்தநாளங்கள் சர்க்கரையால் பாதிக்கப்படுவதால் வரும். இதற்கான மருத்துவம் என்பது கிடையாது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே போதும் நாள்பட இந்த கருமையை மறைந்துவிடும் என்கிறார் மருத்துவர்.
2. peripheral arterial disease: நீண்ட நாட்களாக சர்க்கரை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்களுக்கு வரக்கூடிய மற்றொரு தோல் பிரச்சனை பற்றியும் அவர் கூறுகிறார்.
ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு காலில் ரத்த ஓட்டம் நிற்கும். பின்னர் காலில் ரத்தம் பாயாது. அந்த கால் அழுகும் நிலைக்கு சென்றுவிடும்.
இதனால் கொஞ்ச தூரம் நடந்தால் கால் வலி எடுக்கும். நாளாக நாளாக கால் வலி அதிகரிக்கும். இது மிகவும் ஆபத்தான ஒன்றும் கூட இதற்கு சரியான நேரத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும். இதனால் கால் முழுமையும் கருப்பாகிவிடும். இதனை விரைவில் மருத்துவரை பார்த்து சரிசெய்து விட வேண்டியது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.