இந்த காதலர் தினத்தில் நிம்மதியாக சில இடங்களை நாம் துணையுடன் சுற்றி பார்க்கலாம். இந்நிலையில் இந்தியாவில் உள்ள சில இடங்களுக்கு நாம் செல்ல முடியும். இதில் எங்கு செல்லலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
உதய்பூர், ராஜஸ்தான்
இங்கே அதிக ஏரிகள் இருப்பதால், இதை ’சிட்டி ஆப் லேக்’ என்று அழைக்கிறார்கள். நீங்கள் இங்கே சிறிய போட்டில் செல்ல முடியும். சூரியன் மறைவதை பார்த்து ரசிக்கலாம்.
பிச்சோலா ஏரி பகுதிகளில் போட் ரைட் செல்ல முடியும். இங்கே அழகான ஆடைகள் உள்ள கடைகள், கைவினை பொருட்கள் உள்ளது.
ஆலப்புழா, கேரளா
இங்கே இருக்கும் நீர் நிலைகளில் நீங்கள் நீளமான போட் ஹைவுஸ் இருக்கும். இந்நிலையில் சுற்றி இயற்கை இருக்கும். மேலும் கேரளாவின் பல்வேறு சுவையான உணவுகளை நீங்கள் சாப்பிட முடியும்.
கோவா
இங்கே பிரபலமான கடற்கரை மற்றும் கரையோரங்களில் உணவகங்கள் இருக்கும். போர்ச்சுகல் கட்டடக்கலை பாணியில் ஆன கட்டடங்கள் இருக்கும். பாலோலம் கடற்கரைக்கு நீங்கள் செல்லலாம். பண்டைய கால தேவாலயங்கள் உள்ளது. பல பழமையான கோட்டைகள் உள்ளது . மேலும் காதலர்களுக்கான காதல் அதிகரிக்க வாய்ப்புகள் இங்கே அதிகம்.
சிம்லா, ஹிமாச்சல பிரதேசம்
இது அனைவரும் விரும்பும் இடமாக உள்ளது. பைன் மரங்கள் நிறைந்த இடங்கள் உள்ளது . இங்கே இருக்கும் மால் ரோடுக்கு நாம் பொருமையாக நடந்து செல்லலாம். சிம்லா- கல்கா ரயில் பாதையில் பயணுக்கும் அனுபவம் தனித்துவம் வாய்தது.
ஆக்ரா, உத்தரபிரதேசம்
காதல் சின்னமான தாஜ் மகால் இங்கேதான் இருக்கிறது. மேலும் இங்கே பல்வேறு பழமை வாய்ந்த இடங்கள் கோட்டைகள் காணப்படுகிறது.
Read in english