நோய் எதிர்ப்பு சக்தி உடலில் தேவையான அளவு இருந்தாலே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என அர்த்தம். அதன்படி நோய் எதிர்ப்பு சக்தியை சில விதைகள் சாப்பிடுவதன் மூலம் நம்மால் அதிகரிக்க முடியும். அவை என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவற்றில் நிறைந்துள்ள பல ஊட்டச்சத்துக்கள் நம்மை உற்சாகமாக உணர வைக்கும். இந்த விதைகளில் மெக்னீசியம், ஜிங்க் மற்றும் செலினியம் நிறைந்துள்ளது. இவை நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகின்றன. இந்த விதைகளில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் இன்ஃப்ளமேஷன் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்-ஐ குறைக்கிறது. மேலும் பூசணி விதைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சருமம் மற்றும் முடி வறட்சியைத் தடுக்கிறது. இருமலை குறைப்பதன் மூலம் சுவாசப் பிரச்சினைகளை சரி செய்கிறது. ஓட்மீல் அல்லது யோகர்ட் அல்லது சாலட்ஸ்களில் இதனை சேர்ப்பதன் மூலம் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க செய்யலாம்.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் செலினியம் உள்ளிட்ட பல சத்துகள் நிறைந்திருக்கின்றன. இந்த விதைகள் நோய் தொற்றுகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன. இந்த விதைகளில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம். இவை நீண்ட நேர ஆற்றலை தருகின்றன. இருமல் உள்ளிட்ட சில பிரச்சனைகளை குறைத்து சுவாச ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவுகிறது. இந்த விதைகளில் உள்ள வைட்டமின் பி6-ஆனது மனநிலையை சீராக்க உதவுகிறது. சூரியகாந்தி விதைகள் பொதுவாக ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் வலிமையை மேம்படுத்துகிறது.
எள் விதைகள்
இந்த விதைகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம். எள் விதைகளில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் இன்ஃளமேஷன் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கிறது. இதிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக சுவாச பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த விதைகளோடு கூடுதல் ஊட்டச்சத்துக்களை பெற உங்கள் பொரியல் அல்லது சூப்களில் அல்லது வேகவைத்த பொருட்களில் எள் விதைகளை சேர்த்து கொள்ளுங்கள்.
சியா விதைகள்
சியா விதைகள் இதய ஆரோக்கியம், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதொடு அழற்சியை குறைக்கின்றன. குளிர்கால நோய்களை எதிர்த்துப் போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. கால்சியம் நிறைந்த சியா விதைகள் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் அடர்த்தியை மேம்படுத்துகிறது. சியா விதைகளை தண்ணீர் அல்லது பாலில் ஊற வைத்து எடுத்து கொள்வது கூடுதல் நன்மைகளை அளிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.