New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/13/yf1FW8bicUUnOKwMohQS.jpg)
ஒவ்வொரு பண்டிகையின் போதும் நமக்கு பிடித்தமானவர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து பகிர்ந்து மகிழ்வோம். அதனடிப்பையில், பொங்கல் பண்டிகைக்காக விதவிதமான 10 வாட்ஸ் ஆப் மெசஜ்களை இதில் காணலாம்.
புத்தாண்டு பிறந்தாலும் கொண்டாட்ட மனநிலை கொஞ்சமும் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பொங்கல் பண்டிகை தான். நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கலை மக்கள் அனைவரும் பாரம்பரிய முறைப்படியும், தங்களுக்கு விருப்பமான வகையிலும் கொண்டாடுகிறார்கள்.
விவசாய பெருங்குடி மக்களுக்கும், அந்த விவசாயத்திற்கு பெரிதும் உதவி செய்யும் சூரியன் மற்றும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாட்டம் அமைகிறது. நகர்ப்புறங்களில் வீடுகளுக்குள் பொங்கல் கொண்டாட்டங்கள் இருந்தால், கிராமப்புறங்களில் வீதியெங்கும் களைகட்டத் தொடங்கும்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான முறையில் பண்டிகையை கொண்டாடினாலும், வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதில் எல்லோரும் ஒரே மாதிரி செயல்படுவார்கள். பார்க்க முடியாத வகையில் வெளியூரில் இருப்பவர்கள் தொடங்கி, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வரை அனைவருக்கும் வாட்ஸ் ஆப் மெசஜ்களாகவும், எஸ்.எம்.எஸ்-களாகவும் வாழ்த்து செய்திகளை அனுப்புகிறோம். அதற்காகவே நீங்கள் பகிரக் கூடிய டாப் 10 பொங்கல் வாழ்த்து செய்திகளை இங்கே பார்க்கலாம்
பொங்கல் வாழ்த்துகள்:
சூரியன் தன் ஒளிக்கற்றை
இந்த பூமியின் மீது
செலுத்துவதைப் போன்று
வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்
பொங்கல் வாழ்த்துகள்
நல்வாழ்வு பொங்க
இல்லத்தில் சுவையாறு தங்க
இந்த நாள் போல்
எந்நாளும் மகிழ்வுடன் வாழ
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
நம்மை வாழ வைக்கும் தமிழுக்கும்
விவசாயிகளுக்கும் இந்நாளில் மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்வோம்
பொங்கல் நல்வாழ்த்துகள்
பொங்கல் பண்டிகையின் ஆசி
உங்கள் குடும்பத்தில் நிம்மதி மற்றும்
செழிப்பு என்னும் பெருமையை ஏற்படுத்தட்டும்
பொங்கல் அன்று நலமும்
வளமும் என்றும் சூழ்ந்திட
அன்னைத் தமிழ் மணம்
பரப்பி வாழ்த்துகிறோம்
தமிழர் மரபு காக்கவும்
பாரம்பரியம் போற்றவும்
பொங்கல் வாழ்த்துகள்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துகள்
விவசாயம் செழிக்கட்டும்
விவசாயிகளின் வாழ்க்கைத்
தரம் உயரட்டும். இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
துன்பங்கள் அனைத்தும்
எரிந்து அனைவரின்
வாழ்க்கையும் கரும்பை
போல இனிக்கட்டும்
பகைமையை விட்டுவிட்டு
அன்பை அனைவரிடமும்
பரப்புவோம். இனிய
தைத்திருநாள் நல்வாழ்த்துகள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.