இன்றைய தலைமுறையின் பெரிய பிரச்சனை முடி உதிர்வாக இருக்குறது. இதற்கு சிலர் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து ஹேர் ஆயில், ஷம்பூ உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இவற்றில் இரசாயனம் கலந்திருப்பதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் இருக்கிறது.
எவ்வளவு தான் வெளிபுறமாக பயன்படும் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், சாப்பிடும் உணவுகளில் இருந்து கிடைக்கப் பெறும் சத்துகளுக்கு ஈடாகாது. அந்த வகையில், நம் முடியின் வளர்ச்சி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடிய முக்கியமான மூன்று உணவுகள் குறித்து தற்போது காணலாம்.
முடி வளர்ச்சிக்கு பிரதானமான உணவாக இருக்கக் கூடியது பாதாம் பருப்பு. இதில், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், வைட்டமின் ஈ, மெக்னீஷியம், பையோட்டின் போன்றவை அதிகமாக உள்ளது. இவை நம் முடிக்கு தேவையான அனைத்து சத்துகளை வழங்குகிறது. அதன்படி, தினசரி 10 பாதாம் பருப்புகளை ஊறவைத்து சாப்பிடலாம்.
இதேபோல், வால்நட்டிலும் ஏராளமான சத்துகள் காணப்படுகிறது. குறிப்பாக, வைட்டமின் ஈ, வைட்டமின் பி, அன்டி ஆக்சிடென்ட்ஸ், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் ஆகியவை வால்நட்டில் இருக்கிறது. இது சரும ஆரோக்கியம் மற்றும் முடி என இரண்டிற்கும் தேவையான சத்துகளை வழங்குகிறது. தினமும் 3 வால்நட்டுகளை ஊற வைத்து சாப்பிடலாம்.
அடுத்ததாக, பூசணி விதைகள், ஆலி விதைகள், சூரியகாந்தி விதைகள், சியா விதைகள் ஆகியவற்றின் கலவையை தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். இதில், சின்க், மெக்னீஷியம், செலினியம் போன்ற சத்துகள் உள்ளது.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவது நம் முடி வளர்ச்சி மட்டுமல்லாது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“