Advertisment

நடைமுறை அமல்; கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று வரும் சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இ-பாஸ் பெற்று வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
kodai3.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திண்டுக்கல்  மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இன்று முதல் 07.05.2024 முதல்  30.06.2024 வரை இ-பாஸ்(ePass) பதிவு செய்து வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

kodai.jpeg

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும்  ‘epass.tnega.org” என்ற இணைய முகவரி மூலம் (06.05.2024) நேற்று முதல் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி (06.05.2024) நேற்று இரவு 8.00 மணி நிலவரப்படி, 15,945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானல் வருவதற்காக விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுள்ளன. இதன்மூலம் 3,61,919 பயணிகள் வருகை தரவுள்ளனர்.

kodai1.jpeg

7-ம் தேதி இன்று மட்டும் கொடைக்கானலுக்கு வருகை புரிய 3,792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 28,168 பயணிகள் வருகை தரவுள்ளனர். இன்று அதிக அளவு பயணிகள் வருகை தர உள்ளதால் வியாபாரிகளும், கொடைக்கானல் கைடுகளும், ஓட்டல் நிர்வாகிகளும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment