/indian-express-tamil/media/media_files/2025/07/10/toxic-relationship-recovery-2025-07-10-23-46-48.jpg)
Toxic relationship recovery Khanthini Psychologist
ஒரு உறவு நச்சுத்தன்மை வாய்ந்தது (toxic) என்று தெரிந்திருந்தும், அந்த வலியான உணர்ச்சிச் சுழற்சியில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறீர்களா? இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் என்கிறார் மனநல மருத்துவர் காந்தினி. அதுதான் "நோ காண்டாக்ட் ஜோன்" (No Contact Zone).
அதாவது, சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து எந்தவிதமான தொடர்பையும் துண்டிப்பதுதான் நோ காண்டாக்ட் ஜோன். இது அழைப்புகளையோ, வாட்ஸ்அப் மெசேஜ்களையோ, பழைய ஆடியோ ரெக்கார்டிங்ஸையோ, படங்களையோ பார்ப்பதைத் தவிர்ப்பது மட்டுமல்ல. அவர்களை நேரில் சந்திப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு முறையும் நீங்கள் இதைச் செய்யும்போது, உங்கள் உடல் மீண்டும் அதே உணர்ச்சிபூர்வமான வலியை அனுபவிக்கும், இதனால் உங்களால் அதிலிருந்து மீளவே முடியாது.
இதைத் தாண்டி, பலர் செய்யும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், தங்களுக்கு வலியை ஏற்படுத்திய நபரிடமிருந்தே அதற்கான பதில்களையும், ஒரு முடிவையும் (closure) தேடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது என்கிறார் மருத்துவர் காந்தினி. ஒரு ஆரோக்கியமற்ற உறவில் இருந்து ஒருபோதும் உண்மையான "closure" கிடைக்காது. அந்த நபரிடமிருந்து விலகி இருக்க வேண்டிய நேரம் இது. உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள இதுவே சரியான வழி.
உறவுகளின் வலியில் இருந்து மீண்டு வர, உங்களை நீங்களே கவனித்துக் கொண்டு, அமைதியைத் தேடுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.