/indian-express-tamil/media/media_files/2025/08/18/whatsapp-imag-2025-08-18-11-28-37.jpg)
உலக அளவில் சிற்ப கலை வடிவமைப்பில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள, தமிழகத்தில் தத்ரூப சிலைகளை நவீன வடிவில் கண்கவரும் விதத்தில் உருவாக்கி சிலைகள் விற்பனையில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகின்றது.
இந்திய நாட்டின் பாரம்பரியம், கலை, ஆன்மிகம் மூன்றையும் இணைத்து,தத்ரூபமாக கைவினைச் சிற்பங்களாக பல்வேறு வடிவிலான சிலைகள் காண்பவர் கண்களை கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சிலை விற்பனை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அருண் டைட்டன்,இணை நிறுவனர்கள் ராகுல்கிஷன் தினேஷ் அருணாச்சலம்,சவும்யா,வர்த்தக மேலாளர் விஜய் ஆனந்த், ஆகியோர் கூறுகையில், பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஆர்வத்தையும், சமகாலக் கலைத்திறனையும் ஒருங்கிணைத்து, நினைவுகளையும் பக்தியையும் வடிவமாக்கி, இல்லங்களை அழகாக மாற்ற நினைப்பவர்களுக்கு சிலை விற்பனை மையத்தில் ஏராளமான சிற்பங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.
12 அடி உயரம் கொண்ட சிலைகள் துவங்கி, திருவள்ளுவர், நடராஜப் பெருமான் சுவாமி விவேகானந்தர், முருகப் பெருமான், பெருமாள் ஆகியோரின் சிற்பங்கள், துல்லியமான வடிவமைப்பு, உயிரோட்டமான தோற்றத்துடன் காட்சியளிப்பது காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என தெரிவித்தனர்.
உலக அளவில் சிற்ப கலை வடிவமைப்பில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள தமிழகத்தில் தத்ரூப சிலைகளை நவீன வடிவில் கண்கவரும் விதத்தில் உருவாக்கி சிலைகள் விற்பனையில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் சிலை விற்பனை மையம் கோவையில் தங்களது கைவினை சிலைகளின் தடம் பதிக்க புதிதாக துவக்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.