Advertisment

வைத்தீஸ்வரன் கோயிலில் தொடரும் பாரம்பரியம்: மாட்டு வண்டியில் வந்து லட்சக்கணக்கானோர் வழிபாடு

பழங்காலத்தில் மேற்கொண்ட மாட்டு வண்டி பயணத்தை தொன்று தொட்டு தொடரும் பக்தர்கள்; வைத்தீஸ்வரன் கோயிலில் லட்சக்கணக்கானோர் வழிபாடு

author-image
WebDesk
New Update
mattu vandi

பழங்காலத்தில் மேற்கொண்ட மாட்டு வண்டி பயணத்தை தொன்று தொட்டு தொடரும் பக்தர்கள்; வைத்தீஸ்வரன் கோயிலில் லட்சக்கணக்கானோர் வழிபாடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மயிலாடுதுறை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

Advertisment

மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமகுடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பல நூறு கிலோமீட்டர் பாத யாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இருமாடுகள் பூட்டிய கூண்டு வண்டியில் தாங்கள் உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு வழிநடை பயணமாக பின்தொடர்ந்து வந்தனர். 

இவர்கள் பழமை மாறாமல் இருப்பதற்காக பழங்காலத்தில் மேற்கொண்ட இந்த மாட்டு வண்டி பயணத்தை தொன்று தொட்டு இன்றும் செய்து வருகின்றனர். 

நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து புறப்படுட்டு இரண்டாவது செவ்வாய் கிழமை இங்கு வந்து சேருகின்றனர். குலதெய்வ வழிபாடாகவும், அதே சமயம் ஸ்ரீ தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றியும், நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

அந்தவகையில், இந்த ஆண்டும் பாத யாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாங்கள் வேண்டுதலுக்காகவும், வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய வெப்பிலை கட்டிய குச்சியினை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோயில் கொடிமரத்தில் செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். 

திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு சித்திரை இரண்டாவது செவ்வாய்க்கிழமை நகரத்தார் பாதயாத்திரையை முன்னிட்டு வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை சார்பாக திருக்கோயில் அலுவலகம் முன்பு நேற்று இன்று என இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வை, வைத்தீஸ்வரா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர், தலைவர், செயலர், பொருளாளர், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், அறக்கட்டளையின் சட்ட ஆலோசகர், திருக்கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள், அறங்காவலர்களும் கலந்து கொண்டனர். 

கடந்த பல ஆண்டுகளாக இவ்விழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இவர்கள் அன்னதானம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஒரு மாட்டு வண்டி பயணத்திற்கு ஏறக்குறைய ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு ஆகிறது. ஆனாலும் தங்களின் பாதயாத்திரையை இடைவிடாது செய்து வருகிறோம் என்றனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mayiladuthurai Thanjavur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment